தில்லு இருந்தா போராடு படம் எப்படி இருக்கு!
கிராமத்தில் பட்டப்படிப்பு பய் முடித்த நாயகன் கார்த்திக்தாஸ் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரை சுற்றி வருகிறார். ஊரில் பெரிய மனிதர் தென்னவன் இவருடைய ஒரே மகள் நாயகி அனுகிருஷ்ணா கல்லூரில் படித்து வருகிறார். நாயகி அனுகிருஷ்ணாவை பார்த்ததும் நாயகன் கார்த்திக்தாஸ்க்கு காதல் வருகிறது. ஆனால் நாயகி காதலை ஏற்க மறுக்கிறார் .
ஒரு கட்டத்தில் நாயகன் கார்த்திக் மீது அனுவிற்கு காதல் மலர்கிறது.. இவர்களது காதலை இரு வீட்டாரும் ஏற்க மறுக்கிறார்கள் இதனால் பல அவமானங்களை சந்திக்கும் கார்த்திக் மதுபோதைக்கு அடிமையாகிறான். இதை பார்க்கும் அவனது தாய் மீரா கிருஷ்ணன் அவனை வீட்டைவிட்டு விரட்டுகிறாள் அதன்பிறகு அவனது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுகிறது.
இதற்கிடையே பஞ்சாயத்து பரமேஸ்வரி வனிதாவின் உதவி நாயகனுக்கு கிடைக்கிறது இறுதியில் கார்த்திக்தாஸ், – அனுகிருஷ்ணா இருவரின் காதல் கைக் கூடியதா? இல்லையா? நாயகன் கார்த்திக்தாஸ், வாழ்க்கையில் முன்னேறினாரா ? இல்லையா ? எனபதே “தில்லு இருந்தா போராடு” -படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் கார்த்திக்தாஸ்,இயல்பாக நடித்திருக்கிறார். காதல், செண்டிமெண்ட், கருணை என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரப்பத்தில் காதல் என்று ஊர் சுற்றி திரிபவர் இரண்டாம் பாதில் ஆதரவற்ற சிறுவர்களுக்கு ஆசிரியராக மாறும் காட்சிகள் அருமை.
நாயகியாக நடித்திருக்கும் அனுகிருஷ்ணா கிராமத்து பெண்ணாக வருகிறார். கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்து நாயகனுக்கு துணை நிற்கிறார். பஞ்சாயத்து பரமேஸ்வரி கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டி இருக்கிறார் வணிதா விஜய்குமார் புல்லட்டில் வந்து அதிரடி காட்டுகிறார். இருவருடைய நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்.
யோகிபாபு, மனோபாலா காமெடி காட்சிகள் ரசிக்கும் விதத்தில் உள்ளது. எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன் படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.சாய் தர்ஷன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னி இசை கதைக்கு துணை நிற்கிறது.விஜய் திருமூலம் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை அழகாக படமாக்கியிருக்கிறார்.
காதல் கதைகள் குறித்து எவ்வளவோ படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் காதல் தவிர சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை அழுத்தமாக படமாக்கி இருக்கிறார் எஸ்.கே.முரளீதரன் சிறுவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் சிறப்பான படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
நடிகர்கள் : கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா,யோகிபாபு, மனோபாலா, வனிதா விஜயகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன்,
இசை : ஜி.சாய் தர்ஷன்
இயக்கம் : எஸ்.கே.முரளீதரன்
மக்கள் தொடர்பு : விஜய முரளி & கிளாமர் சத்யா