இந்த கிரைம் தப்பில்ல திரைப்படம் விமர்சனம்!
ஊட்டியில் இருந்து சென்னை வரும் நாயகி மேக்னா மொபைல் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்கிறார். ஆடுகளம் நரேன் தலைமையில் செயல்படும் பாண்டி கமல் மற்றும் இவரது கூட்டாளிகள் சேர்ந்து இன்ஸ்பெக்டர் ,வக்கீல் என அடுத்தடுத்து சிலரை கடத்துகிறார்கள் .
இதே சமயம் மேக்னாவை வெவ்வேறு சூழ்நிலையில் சந்திக்கும் 3 நண்பர்கள் காதலிப்பதாக கூறுகிறார்கள் மேக்னா இவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வர சொல்கிறார் .வந்தவர்கள் மர்மநான் முறையில் கொலை செய்யப்படுகிறார்கள் . இறுதியில் நாயகி மேக்னா வுக்கும் 3 பேர் கொலைக்கும் உள்ள தொடர்பு என்ன? காணாமல் போன இன்ஸ்பெக்டர் ,வக்கீல் உயிருடன் வந்தார்களா? இல்லையா? எனபதே “இந்த கிரைம் தப்பில்ல” படத்தின் மீதிக்கதை.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் நாயகி மேக்னா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். சின்னத்திரை நாயகன் பாண்டி கமல் முதல் முறையாக வெள்ளித்திரையில் நடித்திருக்கும் படம் இது. முடித்தவரை கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களை தவிர படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் .
இசையமைப்பாளர் பரிமளவாசன் இசையில் பாடல்கள் கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். AMM.கார்த்திகேயன் ஒளிப்பதிவு கதைக்கு பக்க பலமாக இருக்கிறது.
பாலியல் குற்றங்கள் பற்றி நிறைய படங்கள் வந்திருந்த்தாலும் இந்த படத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் தேவகுமார் திரைக்கதையில் இன்னும் கவண் செலுத்தி இருந்திருக்கலாம். படத்தில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதை தவிர்த்து பார்த்தால் எது ஒரு நல்ல படம்.அல்ல சமூகத்திற்கான பாடம்
மொத்தத்தில் “இந்த கிரைம் தப்பில்ல” தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்பதை சொல்லும் படம்.
இசை : பரிமளவாசன்
இயக்கம் : தேவகுமார்
மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)