Are you okay baby” படம் எப்படி இருக்கு?
லஷ்மி ராமகிருஷ்ணன் கைவண்ணத்தில் ஆர் யூ ஓகே பேபி அழகான ஒரு கதையை மக்களுக்கு சொல்லி இருக்கிறார்!
திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர் முறையில் வாழும் முல்லையரசி – அசோக் ஜோடிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. வறுமை காரணமாக குழந்தையை சமுத்திரக்கனி – அபிராமி தம்பதிகளுக்கு பணம் வாங்கி கொண்டு கைக் குழந்தை கொடுக்கிறார்கள்.
நீண்ட காலமாக குழந்தை இல்லாத சமுத்திரக்கனி – அபிராமி தம்பதிகளுக்கு குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் இவர்களுடைய வாழ்க்கை செல்கிறது. இந்நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு முல்லையரசி தனது குழந்தையை திரும்ப தரும்படி கேட்கிறார் சமுத்திரக்கனி குழந்தையை தரமறுக்கிறார். அதற்காக அவர் பல முயற்சிகள் செய்து குழந்தையை திரும்ப பெற முடியாமல் இருக்க மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ‘சொல்லாததும் உண்மை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனை அனுகுகிறார்.
தாய் முல்லையரசி பணத்தை வாங்கி கொண்டு குழத்தையை கொடுத்தார் என்ற உண்மையை தெரிந்து கொள்ளும் லட்சு மி ராமகிருஷ்ணன் இந்த விவாகத்திற்கு நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண சொல்கிறார். இறுதியில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
குழந்தை இல்லாத தம்பதியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி இருவரும் இயல்பான் நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். அபிராமி தத்து பிள்ளைக்கு தாய்ப்பால் சுரக்க தன்னை தயார்படுத்திக் கொள்ளும் காட்சி கண்களில் நீர் வரவழைக்கிறது.
முல்லையரசி – அசோக் இருவரும் யதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். குழந்தையைத் தத்து கொடுத்துவிட்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முல்லையரசி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அந்த இளம் பெண்ணின் காதலன் அசோக் சிறப்பான நடிப்பைக் கொடுத்து இருக்கிறார். பாவல் நவகீதன் , வினோதினி வைத்தியநாதன், மிஸ்கின், அனுபமா குமார், ரோபோ சங்கர், கலைராணி, உதய் மகேஷ் என நடித்தித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அருமை பின்னணி இசை உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் இருக்கிறது. கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு காட்சிகளோடு நம்மை பயணிக்க வைக்கிறது.
தரமான படங்களை கொடுக்கும் பெண் இயக்குனர்களில் தனக்கான ஒரு தனி இடத்தை தன் வசமே வைத்து கொண்டு இருப்பவர்தான் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் பெண்களின் மேன்மையை பற்றி படம் எடுக்க இவரை விட சிறந்தவர் இருக்க முடியாது. என்பதை மீட்டும் நிரூபித்து இருக்கிறார்.ஒரு குழந்தை இரு தாயின் பாச போராட்டத்தை அழகாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
நடிகர்கள் : சமுத்திரக்கனி, அபிராமி, லட்சுமி ராமகிருஷ்ணன், மிஷ்கின், ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன், முல்லையரசி, ரோபோ சங்கர், அபிஷேக்
இசை : இளையராஜா
இயக்கம் : லட்சுமி ராமகிருஷ்ணன்
மக்கள் தொடர்பு : சதீஷ் – சிவா ( AIM)