வாழ்வு தொடங்குமிடம் நீ தானே படம் எப்படி இருக்கு!
தரங்கம்பாடியில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் வாழும் பெண் நிரஞ்சனாவுக்கும் அர்ஷத்திக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்கிறார்கள். அர்ஷத் தான் சிறுவயதிலிருந்து காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்று மிகவும் சந்தோஷமாக் இருக்கிறார்.
இந்நிலையில் திருமணத்திற்கு முந்தையை நாள் நிரஞ்சனா அர்ஷத்தை தனியாக அழைத்து பேசுகிறார், நிரஞ்சனா தான் ஸ்ருதி என்கிற பெண்ணை விரும்புவதாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். இறுதியில் நிரஞ்சனா – அர்ஷத் திருமண நடத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தன் பாலின ஈர்ப்பாளர்களாக வரும் நிரஞ்சனா நெய்தியார் மற்றும் ஸ்ருதி பெரியசாமி இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். நாயகனாக வரும் அர்ஷத் எதார்த்தமாக நடித்திருக்கிறார். நிரஞ்சனா அப்பாவாக நடித்தவர் என உட்பட படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தர்ஷன் குமாரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. கதைக்கு ஓட்டத்திற்கு ஏற்ப ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது.
தன் பாலின சேர்க்கையாளர்களின் உணர்வை பிரதிபலிக்கும் படைப்பாக உருவாகி இருக்கிறது. ஆண், பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை போல் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கும் அவர்களின் உணர்வுகளை மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ் பழனி
நடிகர்கள் : ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் , அர்ஷத்
இசை : தர்ஷன் குமார்
இயக்கம் : ஜெயராஜ் பழனி
மக்கள் தொடர்பு : யுவராஜ்