லாக்டவுண் டைரி படம் எப்படி இருக்கு!
டாக்சி டிரைவராக இருக்கும் நாயகன் விஹான் – நாயகி சஹானாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் பணக்கார வீடு பெண்ணான சஹானா பெற்றோரின் எதிர்ப்பை மீறி விஹானை திருமணம் செய்து கொள்கிறார். கணவன் விஹான், மற்றும் ஒரு பெண் குழந்தை என்று பெங்களூரில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
திடீரென்று ஒரு நாள் விஹானின் குழந்தை மயக்கம்போட்டு விழுகிறார். மருத்துவமனைக்கு சென்ற பின் குழந்தைக்கு தலையில் புற்றுநோய் கட்டி இருப்பதாகவும் அதனை உடனே ஆப்ரேஷன் செய்து நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மறு நாள், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் லாக்-டவுனை அறிவிக்கிறார் பிரதமர். இதனால் குழந்தையின் ஆப்ரேஷனுக்கு பணத்திற்கு என்ன செய்வதன்று விழிக்கிறார் விஹான். இதே வேளையில் கடன் கொடுத்த அனைவரும் விஹானிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர், இதனால் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.
எதிர்பாராத விதமாக தொழிலதிபர் முகேஷ் ரிஷியின் இளம வயது இரண்டாவது மனைவி நேஹா சக்சேனாவின் அறிமுகம் விஹானுக்கு கிடைப்பதோடு, அவர் விஹானை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்ற பண உதவி செய்கிறார். ஆனால், அதற்கு பதிலாக அவர் ஒரு விஷயத்தை செய்ய சொல்ல, விஹான் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இறுதியில் நாயகன் விஹானிடம் நேஹா சக்சேனா என்ன? கேட்டார் நாயகன் விஹான் அதை செய்ய தயங்குவதற்கான காரணம் என்ன? எனபதே ’லாக்டவுண் டைரி’ படத்தின் மீதிக்கதை.
.நாயகனாக நடித்திருக்கும் விஹான் ஜாலி முதல் படம் போல இல்லாமல் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். பணம் இல்லாமல் குழந்தையை எப்படி காப்பாற்ற போராடும் தருணத்தில் கண்கலங்க வைத்திருக்கிறார் விஹான். ஆக்ஷன், ரொமான்ஸ்,செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நாயகி சஹானா, பார்ப்பதற்கு அழகாக மட்டுமல்லாமல் காட்சிகளிலும் ஜொலித்திருக்கிறார். அழகு மற்றும் நடிப்பு என இரண்டிலும் அசத்தியிருக்கிறார். நேஹா சக்சேனா, படத்தின் திருப்புமுனை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.
நேஹா சக்சேனாவின் கணவராக நடித்திருக்கும் முகேஷ் ரிஷி, நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் ஜாலி பாஸ்டியன் – பிரவீனா, முன்னா சைமன், முத்துகாளை, விஷ்ணுகுமார், கல்லூரி வினோத், என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
சர்ச்சையான ஒரு விஷயத்தை கதைக்களமாக்கி இருக்கும் இயக்குனர் இயக்குநர் ஜாலி பாஸ்டியன் அனைவரும் வெறுக்கும் விதத்தில் இல்லாமல் ரசிக்கும் விதத்தில் படத்தை எடுத்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் லாக்டவுனால் ஏற்படும் பாதிப்பை சொல்லி இரண்டாம் பாதியில் எப்படி அந்த பிரச்சனையில் இருந்தது நாயகன் மீண்டான் எனபதை அழகாக சொல்லியிருக்கிறார்.
நடிப்பு : விஹான் ஜாலி, சஹானா, நேஹா சக்சேனா, முகேஷ் ரிஷி, எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், ஜாலி பாஸ்டியன், பிரவினா, முன்னா, முத்துக்காளை,
இசை ஜாசி கிஃப்ட் , ஏ.எஸ்.முரளி
இயக்கம்: ஜாலி பாஸ்டியன்
மக்கள் தொடர்பு : டைமண்ட் பாபு