BREAKING NEWS
Search

டிடி ரிட்டன்ஸ் திரை பட விமர்சனம்!

டிடி ரிட்டன்ஸ் திரை பட விமர்சனம்!

பாண்டிச்சேரியில் 1965-ம் காலக்கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பங்களாவில் ஒரு குடும்பம் மனிதர்களை வைத்து ஒரு விளையாட்டை நடத்தி வருகிறது. போட்டியில் வென்றால் கட்டிய பணத்திற்கு இணையாக பல மடங்கு பணம் கிடைக்கும் போட்டியில் தோற்பவர்களை கொலை செய்கிறார்கள். அந்த குடும்பத்தை ஊர் மக்கள் அடித்து தீ வைத்து எரித்து விடுகின்றனர்

தற்போதைய காலக்கட்டத்தில், அதே பாண்டிச்சேரியில் பெரும் புள்ளியாக இருக்கும் பெப்சி விஜயனிடம் இருக்கும் பணத்தை பிபின் மற்றும் முனீஷ்காந்த் குழு கொள்ளையடிக்கப்படுகிறது இந்த நிலையில் பிபின் குழு கொள்ளையடித்த பணம், நகை மொட்டை ராஜேந்திரன் குழுவால் கைப்பற்றப்படுகிறது. அந்த பணம் எதேட்சையாக சந்தானத்தின் கையில் கிடைக்கிறது.

பணத்தோடு பயணிக்கும் சந்தானத்தின் நண்பர்கள் போலீசிடம் இருந்து தப்பிக்க, விபரீதமான விளையாட்டால் கொலை செய்யப்பட்ட குடும்பம் வசித்த பங்களாவில் பணத்தை மறைத்து வைக்கிறார்கள். அதைத் தேடி சந்தானம் செல்ல.ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார் சந்தானம். இறுதியில் நாயகன் சந்தானம் மரண விளையாட்டில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ’டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சந்தானம் அடிக்கும் நையாண்டியால் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை கலகலப்பாக படம் நகர்கிறது. காதல் காட்சிகள், ஆக்‌ஷன், பாடல்கள் என அனைத்தைத்திலும் தனி முத்திரை பதிக்கிறார் சந்தானம். நாயகி சுரபிக்கு படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் குறைவாக வந்த காட்சியிலும் சிறப்பாக செய்திருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், மாறன், சைதை சேது, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், பிபின் என நடித்த அனைவரும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்..வித்தியாசமான பேயாக வில்லன் நடிகர் பிரதீப் ராவத், காமெடி வில்லனாக பெப்ஸி விஜயன் ஆகியோர் நடிப்பில் மிரட்டுகிறார்கள் .

ரோஹித் ஆப்ரஹாமின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு காட்சிகள் ரசிக்கும் விதத்தில் உள்ளது.

ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் பிரேம் ஆனந்த் இதுவரை வந்த பேய் படங்கள் போல் இல்லாமல் திகிலுடன் சிரிப்பு கலந்து கொடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

நடிகர்கள் : சந்தானம், சுரபி, பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், பிபின், கிங்ஸ்லி, பிரதீப் ராவத்

 

இசை : ரோஹித் ஆப்பிரகாம்

இயக்கம் : ஏ.பிரேம் குமார்

மக்கள் தொடர்பாளர் : நிகில் முருகன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *