பானி பூரி’ இணையத் தொடர் – விமர்சனம்!
ஐ டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகன் லிங்காவும், நாயகி ஜம்பிகாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். திருமணம் செய்துக்கொண்டு வாழ வேண்டும் என்று நாயகன் லிங்கா ஆசைப்படுகிறார். தோழியின் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்ததால், காதலிக்கும் ஆண்களின் அன்பு போலியானது, திருமணம் ஆன பிறகு மாறிவிடும், என்று நினைத்து குழப்பமடையும் சம்பிகா, லிங்காவுடனான காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறார்.
சம்பிகாவின் இந்த முடிவுக்கு காரணம் கேட்டு அவரது வீட்டுக்கு லிங்கா செல்ல விஷயம் சம்பிகாவின் அப்பா இளங்கோ குமரவேலுக்கு தெரிந்து விடுகிறது உடனே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இளங்கோ குமரவேல் காதலர்களுக்கு யோசனை சொல்கிறார்.
திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் – மனைவி போல் வாழும் லிவிங் டூ கெதர் முறையில் இருவரும் 7 நாட்கள் வாழ வேண்டும் இந்த 7 நாட்களில் லிங்காவின் காதல் உண்மையாக இருந்தால் அவரை திருமணம் செய்துக்கொள்ளலாம் இல்லை என்றால் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். அதன்படி இருவரும் தனியாக ஒரு வாரம் தனி வீட்டில் வாழச் இருவரும் செல்கின் றனர். அதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். இறுதியில் இந்த ஜோடி வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே பானிபூரி இணையாத தொடரின் மீதிக்கதை.
ஐ டி நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக வரும் நாயகன் லிங்கா இயல்பான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தை பெறுகிறார். காதலியை உருகி உருகி காதலிப்பதாகட்டும் அப்பார்மெட்டின் இருக்கும் நபருக்கு நெஞ்சு வலி ஏற்படும் போது அவரை காப்பாற்ற போராடுவதாகட்டும் இவை அனைத்திலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்
ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சம்பிகா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். தோற்றப் பொலிவும் உடல்மொழியும் அவருக்கு வரவேற்பைக் கொடுக்கின்றன. சம்பிகாவின் அப்பாவாக நடித்திருக்கும் இளங்கோ குமரவேல் ஜாலியான தந்தையாக மட்டும் இன்றி மகளை சரியான பாதைக்கு அழைத்து செல்பவராக பொருத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வினோத் சாகர் நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணியாக நடித்திருக்கும் கனிகா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணு கோபால்
இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, மிகவும் கட்டுப்பாடான இடங்களுக்குள் படம் பிடிக்க வேண்டிய கட்டாயம் என்றாலும் அதைக் கச்சிதமாகக் படமாக்கியுள்ளார்
காதலர்களுக்கும், தம்பதிகளுக்கும் மட்டும் இன்றி ஒட்டு மொத்த மக்களுக்கும் நல்ல அறிவுரையாக இருக்கிறது இந்த பானி பூரி’ இணையத் தொடர் லிவிங் டூ கெதர் இணையத் தொடர் என்றாலே அதை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க.முடியாதளவுக்கு ஆபாசமாக இருக்கும் என்ற எண்ணத்தை முற்றிலுமாக. உடைத்து தகர்த்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்
நடிகர்கள் : நடிப்பு: லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, வினோத் சாகர், ஶ்ரீகிருஷ்ண தயாள்
இசை : : நவநீத் சுந்தர்
இயக்கம் : பாலாஜி வேணு கோபால்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா (D’ one)