மைக்கேல் படம் எப்படி இருக்கு!
மும்பையில் தாதாவாக வலம் வரும் கெளதம் வாசுதேவ்மேனனை எதிர்பாராத ஒரு சமயத்தில் இக்கட்டில் மாட்டிக் கொள்ள, அவரை (சந்தீப் கிஷன்) காப்பாற்றுகிறார். பின்னர் தன்னைக் கொலை செய்ய முயற்சித்தவனையும், அவனது மகள் கதாநாயகி திவ்யான்ஷாவை கொல்ல, கெளதம் மேனன் சந்தீப்பை டெல்லிக்கு அனுப்புகிறார். அங்கு திவ்யான்ஷா உடன் சந்தீப்புக்கு காதல் ஏற்படுகிறது.
அந்த பெண்ணையும், அவரின் தந்தையையும் சந்தீப் கொள்ளாமல் விட்டுவிடுகிறார். இதனால் கோபமடையும் கவுதம், சந்தீப்பை தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார். இறுதியில் கவுதம் மேனனிடமிருந்து இருந்து சந்தீப் உயிர் தப்பித்தாரா? காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதே “மைக்கேல்” படத்தின் மீதிக்கதை..
மைக்கேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தீப் கிஷன் முரட்டுத்தனமான உடல், அதிரடி சண்டை, காதல் என பல பரிமாணங்களை வெளிப்படுத்தி உள்ளார். கதாநாயகியாக வரும் திவ்யன்ஷா கௌசிக், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார்
எதார்த்த வில்லனாக மிரட்டி இருக்கிறார் கவுதம் மேனன் ,. விஜய் சேதுபதி மற்றும் வரலட்சிமி சரத்குமார் தங்களுடைய கதாபாத்திரத்தில் சரியாக நடித்திருக்கின்றனர். மேலும் கதைக்கு தேவையான சரியாக கதாபாத்திரங்களும் கதைக்கு பொருந்தி இருக்கின்றனர்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் ஓகே ரகம், பின்னணி இசை படத்திற்கு வலுசேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக் 90 காலக்கட்டத்தை அப்படியே திரையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். .
‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜா இதயராணியும்’ எடுத்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி ‘மைக்கேல்’ படத்தில் முதல் பாதியை மெதுவாகவும், இரண்டாம் பாதியில் இன்னும் பொறுமையை சோதிக்கும் வகையிலும் கதையை நகர்த்தி இருக்கிறார். திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததால் பார்வையாளர்களுக்கு அலுப்பு ஏற்படுகிறது. ஆக்ஷன் படம் என்பதால் காட்சிகளுக்கு காட்சி ஆக்ஷனாக அமைக்கப்பட்டு முகம் சுழிக்க வைக்கிறது.
நடிகர்கள் : சந்தீப் கிஷன், விஜய்சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கவுசிக், கெளதம் மேனன்
இசை : சாம் சி.எஸ்
இயக்கம் : ரஞ்சித் ஜெயக்கொடி
மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)