V3 படம் எப்படி இருக்கு!
ஆடுகளம் நரேன் வீடுவீடாக செய்திதாள்கள் விநியோகிக்கும் வேலையை செய்து வருகிறார் அவருக்கு பாவனா, எஸ்தர் ஆகிய 2 மகள்ளுடன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒருநாள் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் பாவனாவை 5 வாலிபர்கள் கற்பழித்து விடுகிறார்கள். இதற்கிடையே பாவனாவை சிலர் கற்பழித்து எரித்துவிட்டதாக காவல்துறையிடம் இருந்து நரேனுக்கு தகவல் வருகிறது.
இந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவ, கற்பழிக்கப்பட்ட பாவனாவிற்கு நீதி கேட்டு போராட்டம் வெடிக்கிறது. இந்த சம்பவத்தால் நாட்டில் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்ட, குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று அரசு காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது. இதனை தொடர்ந்து கற்பழிப்புக்கு காரணமானவர்கள் என்று 5 இளைஞர்களை கைது செய்யும் காவல்துறை, அவர்களை என்கவுண்டர் செய்துவிடுகிறது.
5 இளைஞர்களின் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் உடல்களை கேட்கிறார்கள். ஆனால், காவல்துறை கொடுக்க மறுக்கிறது. இதையடுத்து போராட்டம் வெடிக்க, இந்த வழக்கு மனித உரிமை ஆணைய அதிகாரி வரலட்சுமி சரத்குமார் கைக்கு போகிறது. அவருடைய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன . இறுதியில் என்கவுண்டருக்கான காரணம் அது என்ன ? என்பதே ‘V3’ படத்தின் மீதிக்கதை.
மனித உரிமை அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், கதாபாத்திரத்திற்கு ஏற்ற கம்பீரத்தை நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். வரலட்சுமி.அமைதியாகவே இருந்து அதிரடி காட்டுகிறார். அவருடைய தோற்றமும் நடிப்பும் படத்துக்குப் பலம்.
பாதிக்கப்பட்ட பெண் விந்தியாவாக நடித்திருக்கும் பாவனாவின் நடிப்பு அருமை .அவருடைய பாத்திரப்படைப்பு மனதை உலுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடித்திருப்பார்களா என்பது ஒரு கேள்விக்குறி தான்..
ஆடுகளம் நரேன், அவருடைய இரண்டாவது மகளாக நடித்திருக்கும் எஸ்தர் அனில், காவல்துறை அதிகாரியாக வரும் பொன்முடி, கொல்லப்பட்ட இளைஞர்கள் குடும்பத்துக்காகப் போராடும் லோகுவாக நடித்திருக்கும் எழுத்தாளர் சந்திரகுமார் ஆகிய அனைவருமே கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எலன் செபஸ்டியன் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. சிவா பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
பாலியல் அத்துமீறல்களை முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் கூட குறைப்பதற்காகவாவது சில வழிமுறைகளை அரசு பின்பற்றலாமே என யோசனை கூறியதற்காகவும் இயக்குனர் அமுதவாணனை தாரளமாக பாராட்டலாம்
காவல்துறையின் என்கவுண்டர் சம்பவங்களுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல், அந்த அரசியலால் பாதிக்கப்படும் அப்பாவிகள், குற்ற செயல்களிலும் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் என்று பல விஷயங்களை மிக தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் அமுதவாணன்,.
நடிகர்கள் : வரலட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், பிரவீனா, எஸ்தர் அனில், சந்திரகுமார்,
இசை : எலன் செபஸ்டியன்
இயக்கம் : அமுதவாணன்
மக்கள் தொடர்பு :: சதீஷ், சிவா (AIM)