விஜயானந்த் படம் எப்படி இருக்கு!
கர்நாடகாவில் ஹூப்ளி பகுதியில் பிரிண்டிங்க் பிரஸ் நடத்தி வரும் பி.ஜி. சங்கேஸ்வருக்கு 3 மகன்கள். அதில் ஒருவர் விஜய் சங்கேஸ்வர். தனது 3 மகன்களுக்கும் அதே தொழிலைக் கற்றுக் கொடுக்கிறார். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைக்கும் விஜய் சங்கேஸ்வர், இந்த தொழிலை மட்டும் செய்து வந்தால் பெரிதாக சாதிக்க முடியாது என்று லாரி தொழில் தொடங்க ஆசைபடுவதாக சொல்கிறார். ஆனால் விஜய்யின் அப்பா அதற்கு எதிர்ப்பான கருத்தை தெரிவித்து விடுகிறார், மற்றும் விஜய்க்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை என்றும் கூறுகிறார்.
விஜய் பல இடங்களில் போராடி கடனை பெற்று லாரி ஒன்றை வாங்குகிறார். ஆனால் லாரிக்கான எந்த ஏற்றுமதி வேலையும் கிடைக்கவில்லை அதன்பின் அவர் எதிர்பார்த்த அளவிற்கு எதுவும் லாபமில்லாமல், தொடர்ந்து தோல்வியை சந்தித்தார்.இதனையடுத்து தனது கடின உழைப்பினால் 4 லாரிகளை வாங்குகிறார் VRL என்ற நிறுவனத்தை தொடங்குகிறார் இறுதியில் சரக்கு போக்குவரத்து துறையோடு பத்திரிகை துறையிலும் கால்பதிக்கும் நினைக்கும் விஜய் சங்கேஸ்வர் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ‘விஜயானந்த்’ படத்தில் மீதிக்கதை.
விஜய் சங்கேஸ்வராக நடித்திருக்கும் நிஹால் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார் . பல்வேறு வயதுத் தோற்றங்கள், அதற்கு ஏற்ற உடல் மொழிகள், என்று கேரக்டரை உள்வாங்கி ஜொலிக்கிறார் . கதாபாத்திரத்திற்கு தேவையான சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். விஜய் சங்கேஸ்வரின் மகனான ஆனந்த் சங்கேஸ்வர் வேடத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் பாரத் போபண்ணா
விஜய் சங்கேஸ்வரின் மனைவியாக நடித்திருக்கும் சிரி பிரஹலாத், அப்பாவாக நடித்திருக்கும் ஆனந்த் நாக், வினயா பிரசாத், பத்திரிகையாளராக நடித்திருக்கும் நடிகர் என அனைத்து நடிகர்களும் ஆகியோரும் சிறப்பாந நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.கீர்த்தன் பூஜாரியின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப பயணித்து இருப்பது சிறப்பு. மிக சிறப்பாக வசனனங்களையும் பாடல்களையும் எழுதி உள்ளார் மதுர கவி .
பயோபிக் கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் ரிஷிகா சர்மா, திரைக்கதையில் எந்த சமரசமும் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக இயக்கி இருக்கிறார். தொழிலதிபர், பத்திரிகைதுறை முதலாளி, அரசியல்வாதி என பன்முகம் கொண்ட விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை மற்றும் அவரது வெற்றி பயணத்தில் சில கற்பனைகளை சேர்த்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ரிஷிகா சர்மா, நம்பிக்கை தரும்படியாக படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார்.
நடிகர்கள் : நிஹால், சிரி பிரஹலாத், ஆனனந்த் நாக், வினயா பிரசாத், பாரத் போபனா, அர்ச்சனா கொட்டிகே
இசை : கோபி சுந்தர்
இயக்கம் : ரிஷிகா சர்மா
மக்கள் தொடர்பு :யுவராஜ்