வரலாறு முக்கியம் படம் எப்படி இருக்கு!
கோயம்புத்தூரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருபவர் ஜீவா இவருடைய தந்தை கேஸ் ரவிக்குமார் மற்றும் தாய் சரண்யா பொன்வண்ணனுடன் ஒன்றாக வசித்து வருகிறார். இந்த சமயத்தில் ஜீவாவின் வீட்டிற்கு பக்கத்தில் அக்கா காஷ்மிரா மற்றும் தங்கை பிரக்யாவுடன் ஒரு மலையாள குடும்பம்
குடியேருகிறது. நாயகி காஷ்மீராவை ஜீவா காதலிக்க, காஷ்மீராவின் தங்கை பிராக்யா நாக்ரா ஜீவாவை காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஜீவா – காஷ்மீரா இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். காஷ்மீரின் அப்பா தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கு மட்டுமே திருமணம் செய்து கொடுப்பேன் என உறுதியுடன் இருக்கிறார். இறுதியில் ஜீவா – காஷ்மீரா திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே ’வரலாறு முக்கியம்’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஜீவா சிவா மனசுல சக்தி’ படத்திற்கு பிறகு முழு நீள காமெடி படத்தில் கலக்கியுள்ளார் அவருடைய இயல்பான நடிப்பின் மூலம் காதல் ,காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் கலக்கியிருக்கிறார்.
நாயகி காஷ்மிரா மிகவும் அழகாகவும் அதே சமயம் நடிப்பையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.. கதாநாயகியின் தங்கையாக வரும் பிரக்யா நன்றாக நடித்துள்ளார். இவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்து பாராட்டை பெற்றுள்ளார்கள்.
கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் இவர்களுடைய நடிப்பு கதைக்கு தேவையான அளவு கொடுத்துள்ளனர் அரசியல்வாதியாக நடித்திருக்கும் விடிவி கணேஷின் டெல்லி ஆசையும், கண்ணாடியில் கோடு போடும் முறையில் கலகலப்பு. படம் முழுவதும் தனது வசனங்களால் சிரிக்க வைக்கிறார்.
ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்,. பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.சக்தி சரவணனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இருக்கிறது
இயக்குநர் சந்தோஷ் ராஜன்,படத்தை காமெடியாக கொண்டு சென்றிருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது. ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதை என்றாலும் எங்கும் போர் அடிக்காத விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார்.
நடிகர்கள் : ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, பிராக்யா நாக்ரா, கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சாரா,
இசை : ஷான் ரஹ்மான்
இயக்கம் : சந்தோஷ் குமார்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & ரேகா & நாசர்