நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கு !
திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கும் .வேல ராமமூர்த்தி தனது மனைவியுடன் பைரவர் கோவில் செல்கிறார் அங்கு இருக்கும் சாமியார் ஒருவர் நாய் குட்டி ஒன்றை கொடுத்து இதை உங்கள் வீட்டில் வைத்து வளருங்கள் நீங்கள் நினைக்கும் அனைத்தும் கண்டிப்பாக நடக்கும் என கொடுக்கிறார். இவர்களும் அந்த நாய்க்குட்டியை வீட்டிற்கு எடுத்து வந்து வளர்க, இவர்களது பிரச்சனை அனைத்தும் சரியாகி செல்வ செழிப்பாக மாறிவிடுகின்றனர்.
அந்தக் குடும்பத்தில் பிள்ளையாகப் பிறக்கிறார் சேகர் (வடிவேலு) குடும்பம் செல்வத்திலும் கொழிக்க, காரணம் நாய் என்பதை அறிந்த வீட்டு வேலைக்காரன் நாயைத் தூக்கிக் கொண்டு ஹைதராபாத்தில் பெரும் பணக்காரன் ஆகி விடுகிறான். நாய்களை திருடி விற்பனை செய்யும் வடிவேலு, தன் குடும்பத்தில் இருந்து திருடப்பட்ட அதிர்ஷ்ட நாயை தேடி புறப்படுகிறார். இறுதியில் தனக்கு சொந்தமான நாயை கண்டுபிடித்தாரா? இல்லையா?
நாயகன் வடிவேலு படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை தனது வழக்கமான பாணியில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு வடிவேலுவின் நகைச்சுவையை எதிர்பார்த்தே திரைக்கு ரசிகர்கள் வருவார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான். இந்தப் படத்தில் நகைச்சுவையே இல்லாமல் போனது வருத்தம்.
ஆனந்தராஜ்.வரும் இடங்கள் அனைத்தும் சிரிப்பு வெடியில் திரையரங்கம் அதிர்கிறது.. மேக்ஸின் சகோதரியாக நடித்திருக்கும் ஷிவானி நாராயணன் இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகளில் வருகிறார். சிவானியின் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் இருக்கிறது. சிறிது நேரம் வந்தாலும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி, ராமர், முனிஷ்காந்த், பாலா, தங்கதுரை, பூச்சி முருககன், ஷிவானி என படத்தில் ஏகப்பட்ட காமெடி நட்சத்திரங்கள் இருந்தாலும் காமெடி காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருக்கிறது.
விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளும் அழகாக இருப்பதோடு, பிரமாண்டமாகவும் இருக்கிறது சந்தோஷ் நாராயணைன் இசையில் பாடல்கல் கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.
இயக்குனர் சுராஜ் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் வடிவேலுடைய கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் சுராஜ் – வடிவேலு இணைந்த முந்தைய படங்கள் இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் நிலைத்திருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒருவித செயற்கைதனம் தெரிகிறது.
நடிகர்கள் : வடிவேலு, ஆனந்த்ராஜ், சச்சு, வேல ராமமூர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, முனிஷ்காந்த், பாலா, தங்கதுரை, ஷிவாங்கி, ஷிவாணி
இசை : சந்தோஷ் நாராயணன்
இயக்கம் : சுராஜ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்