முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் (மலையாளம்) – விமர்சனம்!
வித்தியாசமான கதைக் களங்களுக்கு எப்போதும் மலையாளத் திரைப்படங்களே முன்னிலை வைக்கின்றன. அந்த வகையில் ஒரு வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையில் வெற்றியடைய நினைக்கும் நபரின் வாழ்க்கையும், அவரின் செயல்பாடுகளுமே ‘முகுந்தன் உன்னி அசோசியேட்’ திரைப்படம்.
வழக்கறிஞரான நாயகன் வினீத் ஸ்ரீனிவாசக்கு வழக்கு எதுவும் கிடைக்காமல் கஷ்ட்டப்படுகிறார். இருந்தாலும் வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர். எதேச்சையாக ஒருநாள் இவரது அம்மா வீட்டில் விழுந்து காலை முறித்துக் கொள்ள அதன் சிகிச்சைக்கு பணமில்லாமல் தவிக்கும்போது பிரபல வழக்கறிஞராக இருக்கும் சுராஜை சந்திக்கிறார் இவர் fவிபத்து இன்சூரன்ஸ் மோசடியில் பணம் சம்பாதிக்கும் விவரத்தை அறியும் .வினீத் ஸ்ரீனிவாசன், பிறகு அதே வேலையை செய்ய தொடங்குகிறார். இறுதியில் வினீத் ஸ்ரீனிவாசக்கு ஏற்படும் இடர்பாடுகள் என்ன என்பதே முகுந்தன் உன்னி அசோசியேட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
வழக்கறிஞராக நடித்திருக்கும் வினீத் ஸ்ரீனிவாசன், அமைதியான முகம், அமைதியான நடிப்பு, என்று நல்ல மனிதருக்கான அனைத்து தகுதிகளும் கொண்டவராக இருந்தாலும், அவர் செய்யும் தவறுகள் அனைத்தும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்சனையில் மாட்டிகொண்டு எப்படி இதில் இருந்து வர போகிறார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது.
நாயகி அர்ஷா பைஜூ அவரை விட கில்லாடியாக இருப்பது… தர்மப்படி தவறாகவே இருந்தாலும் அந்தப் பாத்திரப் படைப்பு நம்மை ரசிக்க வைத்து விடுகிறது.அந்த வேடத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக நடித்திருக்கும் அர்ஷா பைஜூ,
வினீத்துக்கு போட்டி வழக்கறிஞராக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சாரமூடு, சட்டத்துறையால் எப்படிப்பட்ட மோசடிகள் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
விஸ்வஜித் ஒடுக்காதிலின் ஒளிப்பதிவு மற்றும் சிபி மதேவ் அலெக்ஸின் இசை இரண்டுமே கதைக்கு பலம் சேர்த்துள்ளது. படம் ஆரம்பிக்கும் முன்பு போடப்படும் எச்சரிக்கை வாசகம் தொடங்கி, படம் முடியும் வரை எப்படியெல்லாம் புதுவிதமாக ஒரு படத்தை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொடுத்துள்ளனர்
விமல் கோபாலகிருஷ்ணன் மற்றும் அபினவ் சுந்தர் நாயக் இருவரும் சேர்ந்து இந்த கதையை எழுதி உள்ளனர். இந்தப் படம் தவறான முறையில் பணம் சம்பாதிக்கும் சம்வங்களையம்யும், குற்றங்களையும் வழக்கறிஞர் வாழ்க்கை பின்னணியில் சொன்னாலும், அதை காமெடியாக கூறியுள்ளனர். மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘முகுந்தன் உன்னி அசோசியேட்’ படத்தை நிச்சயம் அனைவரும் பார்க்கலாம்.
நடிகர்கள் : வினித் ஸ்ரீனிவாசன், சூரஜ்ஜ, வெஞ்சாராமூடு, சுதய் கோபா,அர்ஷா பைஜு,
இசை: சிபி மேத்யூ அலெக்ஸ்
இயக்கம்: அபிநவ் சுந்தர் நாயக்
மக்கள் தொடர்பு : பரணி, திரு