பரோல் படம் எப்படி இருக்கு!
வடசென்னையில் சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த ஜானகி சுரேசுக்கு லிங்கா, கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் லிங்கா சிறுவயதிலேயே தனது அம்மாவை கேவலமாக பேசிய ஒருவரை கொன்றதால் ஜெயிலுக்கு செல்கிறான். இரண்டாவது மகன் கார்த்திக் பிளம்பிங் வேலைகளை செய்து வருகிறார். அம்மாவை கூட இருந்து பார்த்துக்கொள்கிறான்
லிங்கா, ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் பணத்திற்காக கொலை செய்ய ஆரம்பிக்கிறான் ஆனால் இவனது தனிப்பட்ட விரோதத்திற்காக இரண்டு கொலை செய்கிறான், லிங்காவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கு செல்கிறார். தனது மகனை சிறையில் இருந்து வெளியே எடுக்கவேண்டும் என்று போராடி வரும் அவரது அம்மா தீடீரென இறந்து போகிறார்.
அம்மாவின் இறுதிச் சடங்கு செய்வதற்காக கார்த்திக் லிங்காவை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறார்.ஆனால் அதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. இறுதியில் கார்த்திக் அன்னான் லிங்காவை பரோலில் வெளியே கொண்டு வந்தாரா? இல்லையா? அம்மாவுக்கு இறுதிச் சடங்கு நடந்ததா? இல்லையா? என்பதே ‘பரோல்’ படத்தின் மீதிக்கதை.
கார்த்தி, லிங்கா இருவருமே கதைக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்குகிறார்கள் . இவர்களின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை ஜானகி சுரேஷ் பட கதை நகர்விற்கு முக்கியமானவராக இருக்கிறார்.. நாயகிகளாக வரும் கல்பிக்கா, மோனிஷா முரளி இருவருக்கும் அதிகக் காட்சிகள் இல்லை. என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.வக்கீலாக நடித்திருக்கும் நடிகை வினோதினி சச்சிதாக பொருந்தியிருக்கிறார்.
ராஜ் குமார் அமலின் பின்னணி இசை திரைக்கதை நகர்விற்கு பெரும் உதவியாக இருக்கிறது.மகேஷின் ஒளிப்பதிவு சென்னையின் இயல்பு நிலையை அழகாக படமாக்கி இருக்கிறார். முனீஸ் எடிட்ங் படத்திற்கு பலம்
இயக்குனர் துவராக் ராஜா எடுத்துக்கொண்ட கதைக்களம் புதுமை. திரைக்கதையை வடிவமைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. சில ஆபாச வார்த்தைகளும், காட்சிகளும் இல்லாமல் கதையை நகர்த்தியிருந்தால் அனைத்து வயது தரப்பினர்களும் படத்தை பார்த்திருக்கலாம்.
நடிகர்கள் : லிங்கா, ஆர்எஸ் கார்த்திக், கல்பிகா, மோனிஷா.
இசை :ராஜ்குமார் அமல்
இயக்குனர் : துவாரக் ராஜா
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)