பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கு!
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக கொண்டு,மணிரத்னம். இயக்கத்தில் \உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
தஞ்சை மன்னன் சுந்தர சோழனுக்கு (பிரகாஷ் ராஜ்) ஆதித்த கரிகாலன் (விக்ரம்), அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி), குந்தவை (திரிஷா) என்ற இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.தந்தையின் ராஜ்ஜியத்தில் பிரச்சனை வரப்போவதை ஆதித்த கரிகாலன் உணர்ந்து கொள்கிறார். இந்த செய்தியை தந்தைக்கு தெரியப்படுத்த வந்திய தேவனிடம் (கார்த்தி) பொறுப்பை ஒப்படைக்கிறார்.
சோழ படையில் இருக்கும் பெரிய பழுகுவேட்டையார் (சரத்குமார்), சின்ன பழுகுவேட்டையார் (பார்த்திபன்) மற்றும் சிற்றரசர்கள் தலைமையில் மதுராந்தகணை (ரகுமான்) அரசராக்க முயற்சிப்பதை வந்திய தேவன் கண்டுபிடிக்கிறார். இதனை குந்தவையிடம் சொல்ல அருள்மொழி வருமனை இங்கு அழைத்து வர வதந்திய தேவனிடம் பொறுப்பு ஒப்படைகிறார். இதற்கிடையில் பெரிய பழுகு வேட்டையாரும் தந்திரமாக அருண்மொழியை வரவழைக்க ஒரு படையை ஏற்பாடு செய்கிறார். இறுதியில் அருண்மொழிவர்மனை வதந்திய தேவன் பத்திரமாக அழைத்து வந்தாரா? இல்லையா? என்பதே ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மீதிக்கதை.
சுந்தர சோழராக பிரகாஷ்ராஜ், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியதேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி ஆக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியானாக ஜெயராம், பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, பெரிய வேளார் ஆக பிரபு, பாண்டிய படையின் தலைவனாக கிஷோர், மதுராந்தகன் ஆக ரகுமான், பூங்குழலி ஆக ஐஸ்வர்யா லட்சுமி,என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் ரவிவர்மனின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் செட் வேலைகள் சிறப்பாக இருந்தன.
‘பொன்னியின் செல்வன்’ நாவலை மக்களுக்கு புரியும்படி மணிரத்னம் மற்றும் இளங்கோ குமரவேல் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.பி.ஜெயமோகனின் வசனங்கள் அனைத்து தரப்பினருக்கும் புரியும் படி மிக எளிமையாக இருக்கிறது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னத்தை தவிர இதை யாரும் செய்ய முடியாது என்ற அளவில் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதுடன், ஒவ்வொரு கதாப்பாத்திரங்கள் இடையே உள்ள நட்பு, பகை, வஞ்சம், காதல் உள்ளிட்ட உணர்வுகளையும் சரியாக கொண்டு வந்துள்ளார். ஒரு சரித்திர கதையை இந்த அளவுக்கு ரசிக்கும்படி சொல்லி இருக்கும் இயக்குனரை மனதார பாராட்டியாக வேண்டும்
நடிகர்கள்: விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், பிரபு, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம்: மணிரத்னம்.
மக்கள் தொடர்பு அதிகாரி : ஜான்சன்