பிஸ்தா படம் எப்படி இருக்கு!
மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் நடக்கும் திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் நாயகன் மெட்ரோ சிரிஸ் இதனால் பெண்ணை பெற்றவர்கள் சிரிஷுக்கு சாபம் விடுகின்றனர். ஒருநாள் தெருவில் நாடகம் நடத்தும் நாயகி மிருதுலாவை பார்த்து அவள் மீது காதல்கொள்கிறான். அவளும் காதலிக்கிறாள்.
மணப்பெண்களை கடத்தும் சிரிஸிடம் அந்த வேலையை விட்டுவிடு அப்பத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறுகிறாள். நண்பனுக்குகாக இறுதியாக மணப்பெண்ணை கடத்தும் வேலையில் ஈடுபடும் சிரிஸ் போலீசில் மாட்டிக் கொள்கிறார்..இறுதியில் மெட்ரோ சிரிஸ் – மிருதுளா திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே ‘பிஸ்தா’ படத்தின் மீதிக்கதை.
ஜாலியான இளைஞராக வலம் வரும் நாயகன் சிரிஷ், அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.தனது திருமண விஷயத்தில் எடுக்கும் இறுதி முடிவு இளைஞர்களுக்கு நல்ல அறிவுரையாக இருப்பதோடு, படத்திற்கும் பலம் சேர்க்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் மிருதுளாமுரளி, பாடல்காட்சிகளுக்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார். நாயகியின் தோழியாக நடித்திருக்கும் அருந்ததி நாயர் அழகாக இருக்கிறார். இவ்வளவு அழகான தோழி எதற்கு? என்பதற்கான விடை படத்தின் இறுதி காட்சியில் இருக்கிறது.
சதீஷ், யோகி பாபு, செந்தில் என பல காமெடி நடிகர் படத்தில் இடம் பெற்றிருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. சில இடங்களில் நன்றாக சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
தரண் குமாரின் இசையில் பாடல்கள் எல்லாமே கேட்கும் ரகம் பின்னணி இசை திரைக்கதையோடு பயணித்துள்ளது.எம்.விஜய்யின் ஒளிப்பதிவில் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்.
திருமணங்களைத் தடுத்து நிறுத்துவது என்கிற புதிய தொழிலை அறிமுகப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ரமேஷ் பாரதி, இந்த கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி, நகைச்சுவை காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம். ஆரம்பத்தில் புதிய புதிய காட்சிகள் மூலம் கதை நகர்ந்தாலும் ஆங்காங்கே சில தொய்வு ஏற்படுகிறது
நடிகர்கள் – சிரிஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சதீஷ், யோகி பாபு
இசை – தரண்குமார்
இயக்கம் – ரமேஷ் பாரதி
மக்கள் தொடர்பு அதிகாரி – சுரேஷ் சந்திரா, ரேகா (D one)