பிரின்ஸ் படம் எப்படி இருக்கு!
பாண்டிச்சேரி அருகில் இருக்கும் தேவனக்கோட்டை பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக இருக்கிறார் சிவகார்த்திகேயன், அங்கு ஆங்கிலஆசிரியராக வேலைக்கு சேரும் பிரிட்டிஷ் பெண் மரியா மீது காதல் கொள்கிறார். மரியாவும் அவருடைய காதலை ஏற்றுக்கொள்ளகிறார்.,
சிவகார்த்திகேயனின் குடும்பம் சுதந்திரப் போராட்ட குடும்பம் என்பதால் அவரின் அப்பா சத்யராஜ் பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதற்கிடையில் ஊர் மக்களும் ஒன்று திரண்டு சிவகார்த்திகேயனை ஊரை விட்டு வெளியேறச் சொல்லுகிறார்கள். இறுதியில் சிவகார்த்திகேயன், – மரியா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா” இல்லையா? என்பதே ‘பிரின்ஸ்’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான காமெடி பாணியை இந்த படத்தில் கையில் எடுத்துள்ளார் காதல்,, ஆக்ஷன், நடனம், ரொமான்ஸ் என இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் உக்ரைன் நாட்டு நடிகை மரியா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். ஆங்கிலம் கலந்த தமிழுடன் அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது.
சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ், வழக்கம் போல அசத்தியுள்ளார். தனக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்று கூறி கேலிக்குள்ளாக்கப்படும் போது அதற்கான ரியாக்ஷன்களை கொடுத்து அசாதாரணமாக நடித்துள்ளார். இவருடைய காமெடிகள் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.
சிவகார்த்திகேயனின் நண்பர்களாக வரும் பாரத், சதீஷ், ராகுலுக்கு ரசிக்கும் வகையில் இருந்தது.. வில்லனாக வரும் பிரேம்ஜி வித்யாசமான நடிப்பை கொடுத்துள்ளார். போலீஸ் அதிகாரியாக ஆனந்தராஜ் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.
தமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் . பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இந்திய இளைஞன், பிரிட்டிஷ் பெண் இடையே நடக்கும் காதல் பற்றி ஏற்கனவே சில படங்கள் வெளியாகி இருந்தாலும் . அந்த படங்களில் இருந்து இந்த படத்தை வேறுபடுத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் அனுதீப் படமும் முழுக்க காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர்கள் : சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ், பிரேம்ஜி
இசை: எஸ்.தமன்
இயக்கம்: அனுதீப்
மக்கள் தொடர்பு அதிகாரி : சுரேஷ் சந்திரா, ரேகா (D One)