படவெட்டு’ (மலையாளம்) படம் எப்படி இருக்கு !
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள மல்லூர் கிராமத்தில் விளையாட்டு வீரராக இருக்கும் நாயகன் நிவின் பாளி எதிர்பாராத விபத்தால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருக்குகிறார். விவசாயத்தை நம்பியிருக்கும் அந்த கிராமத்தில், கிராம மக்களின் தேவைகளை கிராம சபை நிர்வாகிகள் பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள். இதற்கிடையே, மக்களுக்கு இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சியின் தலைவர், ஷம்மி திலகன் அந்த கிராமத்து விவசாய நிலங்களை அபகரிக்க திட்டம் போடுகிறார். இறுதியில் நிவின் பாலி, அரசியல்வாதிக்கு எதிராக எடுக்கும் முடிவு என்ன ? என்பதே ’படவெட்டு’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் நிவின்பாலி கிராமத்து இளைஞராக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அமைதியாக அதேசமயம் ஆழமான அவருடைய நடிப்பு படத்துக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது. இறுதியில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் எல்லாவற்றையும் நேர்மறையாக்கிவிடுகிறது. நாயகி அதிதி பாலன் காதலை கண்களிலேயே வெளிப்படுத்தும் உணர்வுகள் சிறப்பு.
குய்யாலி என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷம்மி திலகன்.வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நிவின் பாலியின் அத்தையாக நடித்திருக்கும் ரெம்யா சுரேஷ், ஷினே டாம் சக்கோ, மனோஜ் ஒமன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவு கேரள கிராமத்தின் அழகை நம் கண்முன் நிறுத்துகிறது. கொட்டும்மழையில் தேநீர்க்கடைக் காட்சிகள் பார்ப்பவர்கள் மனதை கொள்ளையடிக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல் அனைத்தும் இனிமை. அதிலும் அந்த மழை பாடல் திரும்ப திரும்ப கேட்கும் தோன்றும் . பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.
படவெட்டு என்றால் போர் என்று பொருளாம்.அதிகாரத்துக்கும் ஆதிக்கத்துக்கும் எதிராக நிவின்பாலி நிகழ்த்தும் போர்தான் இப்படம். இயற்கையையும் மண்வளத்தையும் எப்படி எல்லாம் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் லிஜு கிருஷ்ணா,
நடிகர்கள் : நிவின் பாலி, அதிதி பாலன், ஷம்மி திலகன்
,
இசை : கோவிந்த் வசந்தா
இயக்கம் : லிஜு கிருஷ்ணா
மக்கள் தொடர்பு அதிகாரி : யுவராஜ்