வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு !
கருவேலம் காடு நிறைந்த கிராமத்தில் சிலம்பரசன் தனது தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் வயகாட்டில் வேலை செய்யும் போது, திடீர் என்று தீ விபத்து ஏற்படுகிறது . அந்த விபத்தில் இருந்து தப்பிக்கிறார் உயிர் சிலம்பரசன் . இவரை நினைத்து பயப்படும் தாய் ராதிகா, தனது உறவினரிடம் அழைத்துச் சென்று மும்பையில் வேலை வாங்கி கொடுக்க கேட்கிறார்
மறுநாள் ஊருக்கு புறப்பட ஏற்பாடாகும் நேரத்தில் வேலை வாங்கி தருவதாக கூறிய உறவினர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அவர் எழுதிய கடிதத்துடன் சிலம்பரசன் மும்பை வருகிறான். அங்கு இருக்கும் இசக்கி புரோட்டா கடையில் வேலைக்குச் சேர்கிறார். அங்கே வேலை செய்யும் சிலம்பரசன் ஒரு கட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு கேங்கஸ்டர் கும்பலுடன் இணைகிறார். இறுதியில் சிலம்பரசன் வாழக்கை என்ன ஆனது ? என்பதே ‘வெந்து தணிந்தது காடு’ படத்த்தின் மீதிக்கதை.
முத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிலம்பரசன் சாப்பாட்டிற்கே வழி இல்லாத ஏழை போன்ற உடலமைப்பை தன்னுடைய அயராத உழைப்பால் கொண்டு வந்திருக்கிறார். எதார்த்தமான நடை, அப்பாவித் தனமான முகம், யாராவது முறைத்தால் திரும்ப தாக்கும் துணிவு என கிராமத்து இளைஞனாகவே உருமாறி நிற்கிறார் சிலம்பரசன் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.
பாவை கதாப்பாத்திரத்தில் வரும் கதாநாயகி சித்தி இட்னானி, தனக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சிம்புவுக்கு தாயாக வரும் ராதிகா இயல்பான அம்மா கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் நடித்த அனைவரும் அவர்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்,. பின்னணி இசை கூடுதல் பலம். சித்தார்த்தாவின் ஒளிப்பதிவு மும்பை இருண்முகத்தைக் அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிறார்.
இயக்குனர் கௌதம் மேனன் திரைப்படங்களில் காதல் காட்சிகள் எப்போதும் சிறப்பாக இருக்கும். ஆனால் இதில் காதல் காட்சிகள் திரைக்கதை ஓட்டத்திற்கு கொஞ்சம் தடையாக அமைந்திருக்கிறது. படத்தின் முதல் பாதி மெதுவாக போனாலும். இரண்டாம் பாதி விறுவிறுப்பாக கதையை கொண்டு செல்கிறார் சிலம்பரசனின் ரசிகர்கள் நிச்சயமாக இந்த படத்தை விரும்பி பார்ப்பார்கள். அவர்களுக்கு ஏற்ற எல்லாம் விஷயங்களும் இந்த படத்தில் உள்ளது.
நடிகர்கள் : சிலம்பரசன், சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார், சித்திக் நீரஜ் மாதவ்,
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம்: கவுதம் வாசுதேவ் மேனன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா