பபூன் படம் எப்படி இருக்கு!
கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் , கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ், அனகா , அந்தகுடி இளையராஜா , ஜோஜு ஜார்ஜ் , ஆடுகளம் நரேன், தமிழரசன், ஆடுகளம் ஜெயபாலன், மூணார் ரமேஷ் ,ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பபூன்’
நாடகத்தில் பபூன் வேடம் போடும் நாயகன் வைபவ், நாடக தொழில் நலிந்து வருவதால் அத்தொழிலை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார் வெளிநாடு செல்வதற்காக பணம் தேவைப்படுவதால் நாயகனும் அவனது நண்பன் ஆந்தக்குடி இளையராஜாவும் ஒரு உப்பு மண்டியில் ஓட்டுனராக வேலைக்கு சேர்கிறார்கள் அவர்கள் வேலை செய்யும் இடத்தில போதைப்பொருள் கடத்துவார்கள் என்பது இவர்களுக்கு தெரியாது ,
உப்பு மூட்டை லாரி என்று நினைத்து அவர்கள் ஓட்டி வரும் போது, போலீசில் சிக்கிக்கொள்கிறார். இறுதியில் நாயகன் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே ‘பபூன்’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் வைபவ் கோமாளி வேடத்துக்கு ஏற்ப இருக்கிறார். பயப்பட வேண்டிய காட்சிகளிலும் பதறாமல் இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் முன்னேறியிருக்கிறார். வைபவின் நண்பராக படம் முழுவதும் வரும் பாடகர் ஆத்தங்குடி இளையராஜா. நடிப்பில் கவனிக்க வைக்கிறார் . சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
இலங்கை தமிழ் பெண்ணாக நாயகி அனகா நடித்திருக்கிறார். ஈழத்தமிழர்களின் உரிமை குறித்து பேசும் காட்சிகளில் மனதில் நிற்கிறார்.தனபால் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஜோஜூ ஜார்ஜ் தோற்றத்தி லேயே பயமுறுத்துகிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் ஜெய்பீம் தமிழரசன் அலட்டல் இல்லாமல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் தலைவர்களாக வரும் ஜெயபாலன், ஆடுகளம் நரேன் ஆகியோர் தற்கால அரசியல்வாதிகளை நினைவுபடுத்துகிற வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு கதையோடு பயணிப்பதோடு, தமிழக கடலோரப்பகுதிகளை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்.
நாடகக் கலையின் நிலை, தற்கால அரசியலின் குறுக்கு வெட்டுத் தோற்றம், ஈழ அகதிகள் வாழ்நிலை போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான விசயங்களைத் திரைக்கதையில் சேர்த்திருக்கிறார் இயக்குநர் அசோக் வீரப்பன்.
நடிகர்கள் : வைபவ், அனகா , அந்தகுடி இளையராஜா , ஜோஜு ஜார்ஜ் , ஆடுகளம் நரேன், தமிழரசன், ஆடுகளம் ஜெயபாலன், மூணார் ரமேஷ்
இசை: சந்தோஷ் நாராயணன்
இயக்கம்: அசோக் வீரப்பன்
மக்கள் தொடர்பு அதிகாரி : நிகில் முருகன்