BREAKING NEWS
Search

நாட் ரீச்சபிள் படம் விமர்சனம்

நாட் ரீச்சபிள் படம் எப்படி இருக்கு !


கோவையில் அடுத்தடுத்து  2  பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள்  ஒரு பெண் காணாமல் போகிறார்,   இவர்களை கண்டுபிடிக்க காவல் அதிகாரிகளாக இருக்கும் கதாநாயகன் விஷ்வா  மற்றும் கதாநாயகி  சுபா இவர்கள் இருவரும் இணைந்து இந்த வழக்கை  விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன,   இறுதியில்  2 பெண்களின் கொலைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்தார்களா ? இல்லையா ?  என்பதே  ‘நாட் ரீச்சபிள்’  பத்தின் மீதிக்கதை.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நாயகன் விஷ்வா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் நாயகி சுபா இருவரும் கொலை சம்பவத்தை விசாரணை செய்யும் விதம் இயல்பாக இருக்கிறது.   விஷ்வா எந்தவித அலட்டலும், ஆர்பாட்டமும் இல்லாமல் நடித்திருக்கிறார்.

கவனிக்க வைக்கிற வேடம் சாய் தன்யாவுக்கு. மனநிலை தவறிய அவரை தொடக்கத்திலிருந்து அவ்வப்போது காட்டி வருகிறார்களே எதற்கு? என்கிற ஐயத்துக்குக் கடைசியில் சிறப்பான விடை இருக்கிறது. ரியா என்கிற வேடத்தில் நடித்திருக்கிற ஹரிதாஸ்ரீயும் வேடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லாபோஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்தி உள்ளிட்டோரும் தங்கள் பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

சரண்குமாரின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கிறது. சுகுமாரன்சுந்தரின் ஒளிப்பதிவில் படத்தின் கருப்பொருளை உணரமுடிகிறது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை இயக்கியிருக்கும் இயக்குனர் சந்துரு முருகானந்தம் திரைககதையில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் படம்  இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நடிகர்கள் : விஸ்வா, சாய் தன்யா, காதல் சரவணன், பிர்லா போஸ்,
சுபா தேவராஜ்

இசை: சரண்குமார்

இயக்கம்: சந்துரு முருகானந்தம்

மக்கள் தொடர்பு : பரணி, திரு




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *