BREAKING NEWS
Search

சினம் திரை விமர்சனம்

சினம் படம் எப்படி இருக்கு!

செங்குன்றம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் நாயகன் அருண் விஜய் நேர்மையான அதிகாரி நாயகி பாலக் லால்வாணியை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். அருண் விஜய் தனது மனைவி, குழந்தை என்று சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தாய் வீட்டுக்குசென்று விட்டு திரும்பும் பாலக் லால்வாணி வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

அருண் விஜய் அவரை தேடிக்கொண்டிருக்கும் போது, பாலக் லால்வாணி கொலை செய்யப்பட்ட தகவல் அவருக்கு கிடைப்பதோடு, அவர் உடல் பக்கத்தில் மற்றொரு ஆணும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.
தனது மனைவியை கொலை செய்தவர்களை தேடி அலைகிறார் அருண் விஜய் இறுதியில் அருண் விஜயின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா?என்பதே சினம்’ படத்தின் மீதிக்கதை.

நேர்மையான காவல்துறை அதிகாரியாக வரும் அருண் விஜய் நடிப்பில் மிரட்டி இருக்கிறார் எப்போதும் போல கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன், காவல் அதிகாரி வேடத்திற்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார். குற்றத்தை கண்டால் கோபப்படு என்று அருண் விஜய் பேசும் கிளைமாக்ஸ் வசனம் திரையரங்கை அதிர வைக்கிறது.

கதாநாயகி பாலக் லால்வானி சிறிது நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். போலீஸ் ஏட்டாக நடித்திருக்கும் காளி வெங்கட் , உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஆர்.என்.ஆர்.மனோகர், உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.கோபிநாத் கதையோடு பயணித்தது மட்டும் இன்றி, காட்சி அமைப்புகள், படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளது. ஷபீரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்,. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்துகொண்டு, கற்பனை காட்சிகளுடன் படமாக்கியுள்ளனர். ஜிஎன்ஆர் குமரவேலன் படத்தில் இடம்பெறும் செண்டிமெண்ட் திரைக்கதையின் வேகத்தை குறைக்காதவாறு பயணித்திருப்பதோடு, நம்மையும் கலங்க செய்வது தான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி.

நடிகர்கள் : அருண் விஜய், பாலக் லால்வானி , காளி வெங்கட், ஆர் என் ஆர். மனோகர்

இசை: ஷபீர் தபேரே ஆலம்

இயக்கம் : ஜிஎன்ஆர் குமரவேலன்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா (D’One)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *