BREAKING NEWS
Search

கேப்டன் பட விமர்சனம்

கேப்டன் படம் எப்படி இருக்கு!


பல ஆண்டுகளாக  மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வனப்பகுதிக்குள் மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் முடிவு செய்கிறது அந்த இடத்தை ஆராய்ந்து தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு ராணுவத்திடம் கேட்கிறது. அதன்படி அந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ள செல்லும் ராணுவ குழுவில் உள்ள அனைவரும் மர்மமான  முறையில் மரணமடைகிறார்கள்.

கேப்டன் ஆர்யா தலைமையிலான ராணுவ குழுவினர் மீண்டும் அந்த காட்டுப்பகுதிக்குள்  செல்கிறார்கள்  அங்கு ஏலியன்கள் படையெடுத்து நிற்கிறது. இறுதியில் அங்கு இருக்கும் ஏலியன்களை இவர்கள் அழித்தார்களா? இல்லையா ?   என்பதே  ’கேப்டன்’  படத்தின் மீதிக்கதை.

கேப்டனாக வரும் ஆர்யா அந்த கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக பொருந்துகிறார்.  ஆர்யாவின் குழுவில் இருக்கும் ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் மற்றும் காவ்யா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி. ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார்.  முக்கியமான வேடத்தில் தோன்றும்  சிம்ரன், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவனிக்க வைக்கிறார். மாளவிகா, ஆதித்யா மேனன் ஆகியோர் இராணுவ உயர் அதிகாரிகளாக நடித்திருக்கிறார்கள்.

எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். டி.இமானின் இசையில் கேட்கும் ரகம் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது

ஒவ்வொரு படத்திலும்  ஏதாவதுதொரு சுவாரசியத்தை புகுத்தும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன், இந்த படத்தில் ஏலியன்கள் சம்பந்தமான காட்சிகளை முடிந்த வரை, எவ்வளவு தத்ரூபமாக காட்ட முடியுமோ, அந்த அளவிற்கு காட்டியிருக்கிறார்

நடிகர்கள் : ஆர்யா,  காவ்யா, சிம்ரன், ஹரிஸ் உத்தமன், கோகுல், ஐஸ்வர்யா லட்சுமி, பரத்ராஜ்

இசை: டி.இமான்

இயக்கம்: சக்தி சவுந்தராஜன்

மக்கள் தொடர்பு : சுரேஷ்சந்திரா, ரேகா




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *