பேட்டரி படம் விமர்சனம்
ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் சார்பில் சி. மாதையன் தயாரிப்பில் , மணிபாரதி இயக்கத்தில் செங்குட்டுவன் , அம்மு அபிராமி, எம் எஸ் பாஸ்கர், நாகேந்திர பிரசாத், யோக் ஜேபி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பேட்டரி’
சென்னையில் அடுத்தடுத்து சில கொலைகள் நடக்கின்றன. அந்த கொலைகள் அனைத்தும் ஒரே விதமாக செய்யப்படுகின்றன. இந்நிலையில் நாயகன் செங்குட்டுவன் சப்-இன்ஸ்பெக்டராக புதிதாக பதவியேற்கிறார். பிறகு குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக விசாரணையில் இறங்குகிறார் செங்குட்டுவன்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட, அவரை தொடர்ந்து மேலும் ஒரு கொலை என கொலை சம்பவங்கள் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் உதவி கமிஷனரும் அந்த விசாரணையில் இறங்குகிறார். இறுதியில் குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே ‘பேட்டரி’
படத்தின் மீதிக்கதை.
நாயகன் செங்குட்டுவன் போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, அளவான நடிப்பு மூலம் கவர்கிறார். முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பை கொடுத்து அசத்தியுள்ளார். ஆக்சன் காட்சிகளிலும் அதிரடி காட்டி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.இவர் வருகிற இடங்களில் எல்லாம் கவனம் ஈர்க்கிறார்.
போலீஸ் அதிகாரிகளாக நடித்திருக்கும் யோக் ஜேபி, தீபக் ஷெட்டி ஆகியோர் போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற கம்பீரத்தை தோற்றத்திலும், நடிப்பிலும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.அபிஷேக், நாகேந்திர பிரசாத், எம்.எஸ்.பாஸ்கர், சிறுமி மோனிகா என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது வெங்கடேஷின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.எந்தத் துறைகளில் குற்றம் நடக்கக்கூடாதோ அங்கு குற்றம் நடந்தால் அது எவ்வளவு பெரிய ஆபத்து என்று சொல்லியிருக்கிறார்கள்.
மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை கருவாக எடுத்துக்கொண்ட இயக்குநர் மணிபாரதி, பல திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை மூலம் சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார். மர்ம முடிச்சுகளைப் போட்டு சுவாரஸ்யமான திருப்பங்களோடு செல்லும் கதையில் ஏன் இக்கொலைகள் என்பதைச் சொல்லும் இடத்தில் நிமிரவைக்கிறது.
நடிகர்கள் : செங்குட்டுவன் , அம்மு அபிராமி, எம் எஸ் பாஸ்கர், நாகேந்திர பிரசாத், யோக் ஜேபி
இசை: சித்தார்த் விபின்
இயக்கம்: மணிபாரதி
மக்கள் தொடர்பு : ஜான்சன்