வீட்ல விசேஷம் விமர்சனம்
ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ புராஜக்ட்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வீட்ல விசேஷம்’’
கடந்த 2018ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த வீட்ல விசேஷம்.
ரயில்வேயில் பணியாற்றுகிறார் சத்யராஜ். இவரது மனைவி ஊர்வசி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ஆர் ஜே பாலாஜி பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியின் நிறுவனர் மகளான அபர்ணா பாலமுரளியை காதலித்து வருகிறார். இளைய மகன் பள்ளியில் படித்து வருகிறார்.
ஆர் ஜே பாலாஜி காதல் திருமணம் கைகூடி வரும் நேரத்தில் அவரின் தாய் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனால் ஆர் ஜே பாலாஜி திருமணத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் தாயின் கர்பத்தை ஆர் ஜே பாலாஜி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா என்பதே ஆர் ஜே பாலாஜி காதலி அபர்ணா பாலமுரளியுடன் இணைந்தாரா? இல்லையா ? என்பதே ‘வீட்ல விசேஷம்’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்ஜே பாலாஜி அளவான நடிப்பும் மூலம் அனைவரையும் கவருகிறார். குறிப்பாக சென்டிமென்ட் காட்சிகளில் கவனத்தை ஈர்த்துள்ளார், நாயகியாக வரும் அபர்ணா பாலமுரளி கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்.
சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஜோடி படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தின் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களில் இருவரும் அசத்தலாக நடித்திருக்கிறார்கள்.கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. அதேபோல், கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
படத்தின் முதல் பாதி எந்தவித சலிப்பும் இல்லாமல் போக, இரண்டாம் பாதி ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார்கள் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன். குறிப்பாக பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்காமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி திரைக்கதை அமைத்ததற்கு பாராட்டுகள்.
.மொத்தத்தில் ‘வீட்ல விசேஷம்’ புது வரவு
நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா முரளி,
இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
இயக்கம்: ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா