BREAKING NEWS
Search

மாமனிதன் விமர்சனம்

மாமனிதன் – விமர்சனம்

YSR புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் இளையராஜா யுவன் ஷங்கர் ராஜா இசையில் துபதி, காயத்ரி, K.P.A.C.லலிதா, அனிகா , குகு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ ‘மாமனிதன்’’

தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில்ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் நாயகன் விஜய் சேதுபதி, மனைவி காயத்ரி, மகன், மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். விஜய் சேதுபதி தனது குழந்தைகளை பெரிய பள்ளியில் சேர்த்து படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.எப்போது தான் நம்முடைய வாழ்க்கைத்தரம் உயருமென ஏக்கம் வருகிறது. அதற்கான ஒரு சந்தர்ப்பம் வர, இந்த நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஷாஜிசேன் தனது நிலத்தை விற்பதற்காக அங்கு வருகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் விஜய் சேதுபதி ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறுகிறார்.

விஜய் சேதுபதி நம்பி ஊர் மக்கள் அனைவரும் முதலீடு செய்கிறார்கள். நிலத்தை பதிவு செய்யும் நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் அனைவரையும் ஏமாற்றி விட்டு சென்று விடுகிறார். இதனால் ஊரில் மானம் மரியாதை இழக்கும் விஜய் சேதுபதி. மனைவி, குழந்தைகளை விட்டு ஓடி விடுகிறார். இறுதியில் விஜய் சேதுபதி, மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்ந்தாரா? இல்லையா? என்பதே மாமனிதன் ப்தாஹத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, அன்பு, பாசம் அக்கறை கொண்ட நடுத்தர வர்க மனிதனாக நடித்திருக்கிறார். கோபத்தை அடக்குவது, பின்னர் வெளிப்படுத்தும் விதம் என தனது நடிப்பை சிறப்பாக செய்து இருக்கிறார். மனைவியாக வரும் காயத்ரி குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண் பாத்திரத்தில் கட்சிதமாக பொருத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

விஜய் சேதுபதியின் நண்பராக வரும் குருசோம சுந்தரம் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். கடினமான காட்சிகளை சாதாரணமாக நடித்து விட்டு செல்கிறார். ஷாஜி,சரவணசக்தி, ஜ்வெல்மேரி, அனைகா, கே.பி.ஏ.சி.லலிதா, கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல்லோரும் சிறப்பு.

சுகுமார் ஒளிப்பதிவில் கிராமிய வாழ்வை கண்ணிற்கு இனிமையாக காட்சிப் படுத்தியுள்ளார். அதேபோல் வாரணாசியை லைவ்வாக காட்சிப்படுத்திய விதமும் அருமை. இளையராஜா & யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு வலு சேர்க்கிறது.

சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் யதார்த்த நிலையை அப்படியே படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. குடும்பத்திற்காக தியாகம் செய்யும் மனிதன் மாமனிதன் என்று சொல்லியிருக்கிறார் .

மொத்தத்தில் ‘மாமனிதன்’ சிறந்தவன்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, காயத்ரி,கே.பி.ஏ.சி.லலிதா,, அனிகா

இசை: இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா

இயக்கம்: சீனு ராமசாமி.

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *