பட்டாம்பூச்சி – விமர்சனம்
அவனி டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிப்பில் பத்ரி நாராயணன் இயக்கத்தில் சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பட்டாம் பூச்சி’
தூக்கு தண்டனை பெற்று சென்னை மத்திய சிறையில் இருக்கும் ஜெய், தன்னைப் பற்றி எழுதிய பத்திரிக்கையாளர் ஹனி ரோஸை சந்திக்க விரும்புகிறார் தான் செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதுடன், தான் வேறு பல கொலைகள் செய்துள்ளதாகவும் கூறி அதிர வைக்கிறார். இந்த தகவல் பத்திரிக்கையில் வெளியானதும் அவரது தூக்குத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அவர் செய்த கொலைகளை பற்றி ஒரு மாத கால அவகாசத்திற்குள் இதை விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது.. காவல்துறை அந்த பொருப்பை இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி-யிடம் ஒப்படைக்கிறது.
விசாரணையை மேற்கொள்ளும் சுந்தர்.சி-யிடம் உண்மையை சொல்ல சில கண்டிஷன்களை போடும் ஜெய், அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது புத்திசாலித்தனத்தால் தன்னை நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாகி விடுகிறார். ஜெய்தான் ‘பட்டாம்பூச்சி’ என உணர்ந்த சுந்தர்.சி அதை நிரூபிக்கப் போராடுகிறார். இறுதியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ‘பட்டாம் பூச்சி’ படத்தின் மீதிக்கதை .
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுந்தர்.சி பார்ப்பதற்கு கம்பீரமாக தோன்றுகிறார்.ஆக்ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார். வில்லனாக நடித்திருக்கும் ஜெய் … ஆரம்பத்தில் பொருந்தவில்லை என்றாலும் போகப் போக மிரட்டுகிறார் நாயகியாக நடித்திருக்கும் ஹனி ரோஸ், நீண்ட நாளைக்கு பிறகு தமிழில் தலை காட்டியுள்ளார். ஹனி ரோஸ்சை படத்தின் இறுதிக்காட்சியில் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்
சுந்தர்.சியுடன் கூடவே பயணிக்கும் போலீஸ்காரராக வரும் இமான் அண்ணாச்சி ஒருகட்டத்தில் சுந்தர்.சியின் திட்டத்தைச் செயல்படுத்துவதாக கூறி ஜெய்யின் கோபத்துக்கு ஆளாகி அதிர்ச்சி முடிவுக்கு ஆளாவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. நவநீத் சுந்தரின் இசையும், கிருஷ்ணசுவாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார் இயக்குனர் பத்ரி நாராயணன். அதற்குப் பிறகு ஜெய்யை சுந்தர் சி விரட்டுவது பற்றிய காட்சிகளே அதிகம் இருக்கிறது. இருவரும் ஓடி பிடித்து விளையாடுவது போல திரும்பத் திரும்பக் காட்சிகள் ஒரே மாதிரியாக வந்து கொண்டிருக்கின்றன.
நடிகர்கள்: சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி மற்றும் பலர்.
இசை: நவ்நீத்
இயக்கம்: பத்ரி நாராயணன்.
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அகமது