விஷமக்காரன் – விமர்சனம்
மனக்கசப்பு ஏற்பட்டு பிரியும் நிலையில் உள்ள தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறார் நாயகன் வி வியும் ,சைத்ரா ரெட்டியும் காதலிக்கிறார்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல எண்ணும் சைத்ரா திடீரென்று நாயகனை விட்டு பிரிந்து செல்கிறார். இந்நிலையில் தன் தோழியின் திருமண வாழ்வின் பிரச்சினையை தீர்க்க கேட்டு வருகிறார் நாயகி அனிகா விக்ரமன். அவரது அழகில் மயங்கும் வி அவளது தோழியின் பிரச்சனையை தீர்த்து வைப்பதுடன் நாயகியை காதலிப்பதாகவும் சொல்கிறார். அத்துடன் சைதன்யா ரெட்டியுடனான தன் கடந்த கால காதலை பற்றியும் அவளிடம் சொல்கிறார்.
ஒரு கட்டத்தில் வியும் , அனிக்காவும் திருமணம் செய்து கொள்ள அவரது முன்னாள் காதலி சைத்ரா இவர்களின் வாழ்க்கைக்குள் வர அடுத்து இவர்களது வாழக்கை என்ன ஆகிறது என்பதே ‘விஷமக்காரன்’படத்தின் மீதிக்கதை.
படத்தை இயக்கியிருக்கும் வி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஏதார்த்தமாக நடித்துள்ளார். நாயகிகள் அனிக்கா விக்ரமன், சைதன்யா ரெட்டி இருவரும் அழகாக இருக்கிறார்கள். கொடுத்த வேலையையும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் ஜே.கல்யாண், கதைக்களத்துக்குத் தேவையான வண்ணமயமான இடங்களைத் தேர்வு செய்து அவற்றை அழகாகக் காட்டுகிறார் கவின்-ஆதித்யா இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை சிறப்பு. .
படத்தில் மொத்தம் வி, அனிகா விக்ரமன்,சைத்ரா ரெட்டி மூன்றே கேரக்டர்கள் தான் படம் முழுப்படத்தையும் தைரியமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் வி-யின் ‘விஷமக்காரன்’-னில் சில குறைகள் இருந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சி அத்தனை குறைகளையும் நிறைகளாக மாற்றி விடுகிறது.யாரும் பின்பற்றக்கூடாத புத்திசாலித்தனத்தைத் திரைக்கதையாக்கியிருக்கிறார் வி.
நடிகர்கள் : வி, அனிகா விக்ரமன், சைத்ரா ரெட்டி
இசை : கவின்- ஆதித்யா
இயக்கம் : வி
மக்கள் தொடர்பு : கே எஸ் கே செல்வா