BREAKING NEWS
Search

பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

சென்னையில் பிரபல பள்ளி ஒன்றில் நூலகத்தில் புத்தகக் காப்பாளராக இருக்கும் விதார்த். செவித்திறன் , பேசும் திறன் இல்லாதவர், இவருடைய மனைவி லஷ்மி ப்ரியா. அவரும் கணவரைப் போல் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். துபாயில் வேலை பார்க்கும் கருணாகரன் திருமணத்துக்காக சென்னை வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்.

ஒருநாள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் விதார்த், தன்னையும் அறியாமல் அசந்து தூங்கி விடுகிறார். அதை போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் கருணாகரன் விளையாட்டாக போட, அதனால் அந்தப் பதிவு விதார்த்தை தவறாக சித்தரிப்பதோடு அதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.. இறுதியில் விதார்த் பிரச்சனையில் இருந்து மீண்டாரா ? இல்லையா ? என்பதே ‘பயணிகள் கவனிக்கவும்’படத்தின் மீதிக்கதை

நாயகனாக நடித்திருக்கும் விதார்த், காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாதவராக நடிப்பில் அசத்திருக்கிறார். சொல்ல நினைக்கும் விஷயத்தை பேசும் திறன் இல்லாத காரணத்தால் சொல்லத் துடிக்கும்போதெல்லாம் படம் பார்ப்பவர்களின் மனதையும் துடிக்கச்செய்கிறார்.இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான விருது நிச்சயம் கிடைக்கும். விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் லஷ்மி ப்ரியாவின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் அருமை.

படத்தின் இன்னொரு நாயகனாக கருணாகரன், பொருத்தமான தேர்வு . தான் செய்த தவறால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எண்ணி பயப்படும் காட்சிகளில் மிக இயல்பாக நடித்திருக்கிறார்.கருணாகரனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் மாசும் ஷங்கரின் நடிப்பு சிறப்பு விதார்த்தின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் சரண் மற்றும் மகளாக நடித்திருக்கும் சிறுமி மதி ஆகியோரும் நடிப்பு மூலம் கவனிக்க வைக்கிறார்கள். காவல்துறை அதிகாரியாக வருகிற பிரேம் சிறுகுற்றவாளிகளுக்குத் தருகிற நூதன தண்டனை ரசிக்க வைக்கிறது. பாண்டி குமார் ஒளிப்பதிவும் ஷாம்நாத் நாக்கின் இசையும் படத்துக்கு குருட்டுதல் பலம் சேர்க்கிறது.

மலையாளத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளை அள்ளிய விக்ருதி திரைப் படத்தின் ரீமேக் தான் இது. எளிய மனிதர்களின் வாழ்க்கை பின்னணியில் உலக அளவிலான ஒரு பிரச்சனையை மிக எதார்த்தமாக பேசியிருக்கும் இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகள் எளிமையாக இருந்தாலும், அதன் மூலம் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் சொல்லியிருக்கும் கருத்து மிக மிக முக்கியமானது நவீன கண்டுபிடிப்புகளை விளையாட்டு என்ற பெயரில் பயன்படுத்தும் போது அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்

நடிகர்கள் : விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர்

இயக்கம் : எஸ்.பி.சக்திவேல்

மக்கள் தொடர்பு : யுவராஜ்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *