திரைப்பட தயாரிப்பில் ஒரு புதிய பரிமாணம்!
இந்த அறிய வகை தொழில் நுட்பம், திரைப்பட தயாரிப்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்! -இயக்குனர் மணிரத்னம் பெருமிதம்!
இந்த தொழில்நுட்பம் என்னை மிகவும் கவர்ந்தபடியால், எனது பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு திரைப்படம் தயாரிக்கிறேன்! T .G .தியாகராஜன் , சத்யா ஜோதி பிலிம்ஸ்.
Honey Frameworks நிறுவனத்தின் அறியாதோரு, புதியதொரு தொழில்நுட்பத்தின் தொடக்கம்!
திரைப்பட தயாரிப்பு செலவை குறைக்கவும் எளிதான விதத்தில் செயல்படவும் இத்தொழில்நுட்பம் உதவும்!
விஷமக்காரன் (2020)
கொரோனாவின் தாக்கம் தொடங்குவதற்கு முன்னால் இப்படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் வழக்கமான முறையில் 19 Call -Sheet களின் வாயிலாக செயல்படுத்தப்பட்டது.
.எனினும், இதர படத்தயாரிப்பு சம்பந்தமான செயல்பாடுகளை எளியதாக்கவும் செலவினை குறைக்கவும் புதியதொரு தொழில்நுட்பத்தை உருவாக்கி, பயன்படுத்தி, விஷமக்காரன் திரைப்படத்தை சிறப்பாக உருவாக்கிட வேண்டும் என முடிவு செய்ததோடு நின்றுவிடாமல், செயல்பாட்டிலும் இறங்க முடிவு செய்யப்பட்டது!
களத்தில் தானே இறங்கி இதற்குண்டான தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் உருவாக்கி செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது!
எனினும், இதர படத்தயாரிப்பு சம்பந்தமான செயல்பாடுகளை எளியதாக்கவும் செலவினை குறைக்கவும் புதியதொரு தொழில்நுட்பத்தை உருவாக்கி, பயன்படுத்தி, விஷமக்காரன் திரைப்படத்தை சிறப்பாக உருவாக்கிட வேண்டும் என முடிவு செய்ததோடு நின்றுவிடாமல், செயல்பாட்டிலும் இறங்க முடிவு செய்யப்பட்டது!
களத்தில் தானே இறங்கி இதற்குண்டான தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் உருவாக்கி செயல்படுத்தவும் முன்வந்தது!
அந்த அடிப்படையில் உருவான ஒரு தொழில்நுட்பம்தான் இந்த Honey Flicks !
தயாரிப்பு செயல்பாட்டில் 19 Call Sheet களிலிருந்து 13 Call Sheet களாக குறைக்கப்பட்டு 40 சதவிகிதம் செலவு குறைக்கப்பட்டது!
திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்திறங்கியுள்ள இந்த புதிய வகை தொழில்நுட்பம்,தற்சமயம், தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும், இது ஒரு சோதனை ஓட்டம் என்கிறபடியால்!
வெகு விரைவில் PAN INDIA தயாரிப்புகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்பட ஏற்பாடுகள் செயல்முறைப்படுத்தப்படும்!
இந்த தொழில்நுட்பம் மூலமாக தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தயாரிப்பு ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் மிகப்பெரிய ஒரு மறுமலர்ச்சியை திரையுலகில் துளிர்விட செய்யும் என்பது உறுதி!
Vijay K என்பவர்தான் இந்த தொழில்நுட்பத்தி உருவாக்கி ,விஷமக்காரன் என்கிற திரைப்படத்தையும் உருவாக்கி இப்படத்தில் பிரதான வேடத்தில் நடித்தும் இருக்கிறார்!
6 முறை தேசிய விருது, உலக படவிழாக்களில் பல முறை விருதுகள் மற்றும் அவரது கைவண்ணத்தில் September 30th 2022 வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் -1 என்கிறாய் மிக பிரம்மாண்டமான ஒரு படத்தை உருவாகியுள்ள இயக்குனர் மணிரத்னம், இந்த தொழில்நுட்பத்தை, சத்ய ஜோதி பிலிம்ஸ் அதிபர் தியாகராஜன் (மூன்றாம் பிறை போன்ற உயரிய படங்களை தயாரித்தவர். மணிரத்தினத்தின் முதல் தமிழ் படமான பகல் நிலவு படத்தை தயாரித்தவர்) மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் தொடங்கிவைத்தார்!
மேலும் விவரங்களுக்கு
www.honeyflicks.com – அணுகவும்.
மின்னஞ்சல் முகவரி -info@mediastackinfo.com