டாணாக்காரன்’ – விமர்சனம்
விக்ரம் பிரபுவின் தந்தை லிவிங்ஸ்டன் காவல் துறையினரால் பாதிக்கப்படுகிறார். அதனால் தனது மகனை காவல் துறை அதிகாரியாக வேண்டும் என கூறிவிட்டு இறந்துவிடுகிறார். திருநெல்வேலியில் இருக்கக்கூடிய ஒரு போலீஸ் பயிற்சி மையத்தில் விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் போலீஸ் பயிற்சிக்கா செல்கின்றனர்.போலீஸ் பயிற்சியில் விக்ரம் பிரபுவுக்கும் பயிற்சியாளர் லாலுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் விக்ரம் பிரபு போலீஸ் ஆக கூடாது என்று லால் தொந்தரவு கொடுக்கிறார் இவரது டார்ச்சரான பயிற்சியை தாங்க முடியாமல் பலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். பலர் அங்கிருந்து ஓடியும் இருக்கிறார்கள். இறுதியில் லாலின் தொந்தரவுகளை தாண்டி விக்ரம் பிரபு போலீஸ் ஆனாரா? இல்லையா? என்பதே ‘டாணாக்காரன்’ மீதிக்கதை.
நாயகனாக நடித்து இருக்கும் விக்ரம் பிரபு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். சரியான கதாப்பாத்திரம் அதை நேர்த்தியாகவே நடித்து கொடுத்துள்ளார். தன் முழு உழைப்பையும் கொடுத்து நடிப்பால் வென்றிருக்கும் படம் தான் இந்த “டாணாக்காரன்”. கதாநாயகி அஞ்சலி நாயர் யதார்த்த அழகில் நம்மை கவர்கிறார்
காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் அநீதிகள் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியில் வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் இடையில் நடைபெறும் போராட்டம் எனவும் படத்தை அழகாக இயக்கியுள்ளார் தமிழ்.
வில்லனாக வரும் லால் வரும் காட்சிகள் உண்மையில் நமக்கே பயமாக இருக்கு எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் கதாபாத்திரம் கவனிக்க வைக்கிறது.. பாவேல், பிரகதீஸ்வரன், கார்த்திக் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையின் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அருமை, அதிலும் அந்த பயிற்சி மைதானத்தில் நடைபெறும் காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் ரசிக்குபடி அமைந்துள்ளது.
போலீஸ் பயிற்சி மையத்தில் என்னவெல்லாம் நடக்கிறது, எப்படி எல்லாம் கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது என்பதை தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் தமிழ்.
நடிகர்கள்: விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், MS பாஸ்கர், மதுசுதன் ராவ், போஸ் வெங்கட் மற்றும் பலர்.
இசை: ஜிப்ரான்
இயக்கம்: தமிழ்
மக்கள் தொடர்பு : ஜான்சன்