ராக்கி – விமர்சனம்
நாயகன் வசந்த் ரவியின் தந்தை பாரதிராஜாவிடம் சேர்ந்து ரவுடி தனங்களை செய்கிறார். ரவியின் தந்தை இறந்த பிறகு அவர் செய்து வந்த வேலை அனைத்தும் வசந்த் ரவியிடம் வந்து சேருகிறது. இதனால் நாயகனுக்கும், பாரதிராஜாவின் மகனுக்கும் இடையே பிரச்சனை எழுகிறது. இது ஒருக்கட்டத்தில் நாயகனின் அம்மா ரோகிணியை பாரதிராஜாவின் மகன் கொல்ல, பதிலுக்கு வசந்த் ரவி பாரதிராஜாவின் மகனை கொலை செய்கிறார். இதனால் வசந்த் ரவிக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே பகை உருவாகிறது..
ஜெயிலுக்கு சென்று பல ஆண்டுகள் கழித்து திரும்பும் வசந்த் ரவி, தனது துலைந்துபோன தங்கையை தேட ஆரமிக்கிறார்! ஒருவழியாக ரவீனாவை கண்டுபிடிக்கிறார் ரவி . கொஞ்ச நேரத்திலேயே ரவீனாவை வசந்த் ரவியின் கண்முன்னே கொலை செய்து விடுகிறார்கள் பாரதிராஜாவின் ஆட்கள். இறுதியில் பாரதிராஜா வசந்த் ரவியை கொலை செய்தாரா? இல்லையா” என்பதே “ராக்கி ” படத்தின் மீதிக்கதை.
அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர், டிரைலரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் படத்தில் நிரம்பி இருக்கும் வன்முறை காட்சிகள் அளவுக்கு அதிகம் மட்டுமின்றி, பார்வையாளர்கள் முகம் சுளிக்க வைக்கிறது. வன்முறை காட்சிகளில் இடம்பெற்றுள்ள அருவருக்கத்தக்க காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மா, தங்கை பாசம், சண்டை, ஏக்கம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். அவருடைய வசன உச்சரிப்பில் ஹீரோயிசம் தெரிகிறது தங்கையாக வரும் ரவீணா நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது அம்மாவாக வரும் ரோகிணி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மணிமாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாரதிராஜா நடிப்பில் மிரட்டி உள்ளார். படத்தில் நடித்த அனைவருமே தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஷ்ரியாஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பெரிய பலம். தர்புக்கா சிவாவின் இசையும் வலு சேர்த்து இருக்கிறது. கதையோடு பயணிக்கும் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்.
நடிகர்கள்: வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகினி மற்றும் பலர்.
இசை: தர்புகா சிவா
இயக்கம்: அருண் மாதேஸ்வரன்.
தயாரிப்பு: RA ஸ்டுடியோஸ் & ரவுடி பிக்சர்ஸ்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்