BREAKING NEWS
Search

மீண்டும் – விமர்சனம்

மீண்டும் – விமர்சனம்

ஹீரோ சினிமாஸ் சார்பில் சி. மணிகண்டன் தயாரிப்பில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் கதிரவன், அனகா, சரவணன் சுப்பையா, சுபா பாண்டியன், எஸ் எஸ் ஸ்டான்லி, சுப்ரமணிய சிவா, கேபிள் சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் “மீண்டும்”

ஒரு பெண்ணுக்கும் அவளது இரண்டு கணவர்களுக்கும் இடையே ஒரு குழந்தைக்காக நடக்கும் பாசப் போராட்டமே ‘மீண்டும்’ படத்தின் கதைக்கரு.

ரகசிய புலானாய்வு பிரிவில் அதிகாரியாக இருக்கும் நாயகன் கதிரவன் , நாயகி அனகாவை காதலிக்கிறார்.. அனகாவின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். அனகா கர்ப்பமாக இருக்கும்போது, ரகசிய உளவுப்பணி காரணமாக வெளியூர் போகிறார் கதிரவன். பல நாட்களாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அனகாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தாங்கள் விரும்பாத மணஉறவில் உதித்த குழந்தை என்பதால், அனகாவின் பெற்றோர், குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டதாக அனகாவிடம் பொய் சொல்லிவிட்டு, குழந்தையைக் கொண்டுபோய் அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு, அனகாவுக்கு சரவண சுப்பையாவுடன் இரண்டாவது திருமணம் செய்து வைக்கின்றனர்.

கதிரவனுக்கு தனது மனைவிக்கு இரண்டாவது திருமணம் நடந்தது தெரிய வருகிறது. ஆசிரமத்தில் வளரும் தன் மகனை கண்டுபிடித்து அழைத்து வந்து வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் தன் மகன் உயிரோடு இருக்கிறார் என்பது அனகாவுக்குத் தெரியவருகிறது. அதன் பிறகு இந்த தகவலை தன்னுடைய இரண்டாவது கணவரிடம் சொல்ல அவரும் குழந்தையை வளர்க்கலாம் என்கிறார். ஆனால் கதிரவன் தர மறுக்கிறார். அதன்பிறகு கதிரவனுக்கு மீண்டும் அவசர வேலை வந்துவிடுவதால் தன்னுடைய மகனை அனகாவிடம் விட்டுவிட்டுச் சென்று விடுகிறார். இறுதியில் சென்றவர் திரும்பி வந்தாரா? இல்லையா / என்பதே “மீண்டும்” படத்தின் மீதிக்கதை.

நாயகனாக வரும் கதிரவன் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் குழந்தைக்கும் இடையிலான பாசப்பிணைப்பு நெகிழ்ச்சி ஊட்டுகிறது. இலுமினாட்டிகள் ஆளும் சிலாக்கி தீவில் முழு நிர்வாணமாக அவர் சித்ரவதை அனுபவிக்கும் காட்சியில் அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

நாயகன் கதிரவன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வருக்கும் குழந்தைக்கும் இடையிலான பாசப்பிணைப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இலுமினாட்டிகள் ஆளும் சிலாக்கி தீவில் முழு நிர்வாணமாக அவர் சித்ரவதை அனுபவிக்கும் காட்சியில் அனைவரின் மனதில் இடம்பிடிக்கிறார்.

நாயகி அனகாவிற்கு அழுத்தமான கதாபாத்திரம். அதனை உணர்ந்து பாசத்திற்காக ஏங்கும் அம்மாவை கண்முன் நிறுத்துகிறார். . சரவண சுப்பையா பெருந்தன்மையும், பரந்த மனப்பான்மையும் கொண்ட நல்ல கணவனாக திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் நடித்து இருக்கும் இயக்குனர்கள் எஸ் எஸ் ஸ்டான்லி, சுப்ரமணிய சிவா, கேபிள் சங்கர் கவனம் கவர்கிறார்கள்.

ஸ்ரீனிவாஸ் தேவம்சம் ஒளிப்பதிவு நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது ஒரு பெண்ணிற்கும் அவரது இரண்டு கணவர்களுக்கும் இடையே ஒரு குழந்தைக்காக நடக்கும் உணர்வுகளின் பாசப் போராட்டம் என்ற ஒரு கோணத்திலும், இலுமினாட்டி, சுனாமி, கருப்பு பணம், உளவாளி என்று; இன்னொரு கோணத்தில் கதை பயணிக்கிறது, சிட்டிசன் படத்தில் ஒரு ஊரே காணாமல் போனதாக சொல்லி அப்படத்தை பேச வைத்த சரவண சுப்பையா இப்படத்தில் சுனாமி பேரழி பற்றிய சந்தேகத்தை கிளப்பி அதிர வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் “மீண்டும் ” பாச போராட்டம்

நடிகர்கள் : கதிரவன், அனகா, சரவணன் சுப்பையா, பிரணவ் ராயன். அனுராதா, துரை சுதாகர், அபிதா ஷெட்டி, யார் கண்ணன், தர்ஷிமி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, இந்துமதி மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்னி, மோனிஷா

இசை: நரேன் பாலகுமார்

ஒளிப்பதி:ஸ்ரீனிவாஸ் தேவாம்ஸம்

தயாரிப்பு: ஹீரோ சினிமாஸ் சி.மணிகண்டன்

இயக்கம்: சரவணன் சுப்பையா

மக்கள் தொடர்பு : டைமண்ட் பாபு




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *