BREAKING NEWS
Search

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை – விமர்சனம்

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ – விமர்சனம்

நபீஸா மூவிஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கத்தில் ருத்ரா, சுபிக்ஷா, சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ” “சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’”

சென்னையில் ரேடியோ துறையில் இருக்கும் நாயகி சுபிக்ஷா ஆடியோ டாக்குமெண்டரிக்காக நாயகன் கதிரை தேடி செல்கிறார். தனது துறையில் சாதிப்பதை காட்டிலும் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதே போதும் என்ற மனநிலையில் இருக்கும் நாயகன் ருத்ரா நாயகிக்கு உதவ காட்டுப் பறவைகளின் ஓசை, அருவிகளின் இரைச்சல் என பலவற்றை அதனதன் இயல்பு மாறாமல் பதிவு செய்யும் பணியில் ஈடுபடுகிறார். கதிர் தன் வேலையில் கவனமாக இருந்து பணியை முடித்துக்கொடுக்கிறார். அந்த பயணத்தில் இருவருக்கும் காதல் மலர்கிறது. அந்த டாகுமெண்ட்ரி பல விருதுகளை சுபிக்‌ஷாவுக்கு பெற்றுத்தருகிறது. ஒரே துறையில் பயணிக்கும் இவர்களது காதலுக்கு இவர்களது மனநிலையே எதிரியாகிறது. இறுதியில் காதலர்கள் வாழ்க்கையில் இணைந்தார்களா ? இல்லையா? என்பதே ’சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படத்தின் மீதிக்கத்தை.

நாயகன் ருத்ரா, முதல் படத்திலேயே சொந்த குரலில் டப்பிங் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. குளித்தனமான கிராமத்து இளைஞராக நடிப்பில் கவர்கிறார். தனது காதலி மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதை பார்த்து வேதனைப்படும் காட்சிகளில் காதல் உணர்வுகளையும், கிராமத்து இளைஞர்களின் மனநிலையையும் அழகாக பிரதிபலிக்கிறார் 5 சிறந்த நடிகர் விருதுகள் அறிமுக நாயகர் ருத்ராவிற்கு கிடைத்திருக்கிறது… என்பது கூடுதல் சிறப்பு.

நாயகி சுபிக்ஷா நல்ல பொருத்தம். நிமிர்ந்த நடையும் திமிரும் இளமையுமாய் வருகிறார். தனது மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த முடியாமலும், தனது லட்சியத்தில் வெற்றி பெறும் முயற்சியை தனது காதலனுக்கு புரிய வைக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். நாயகனுக்கு நண்பனாக ‘ராட்சசன்’ வினோத் சாகர். சிறிய வேடம் என்றாலும் அதனை சிறப்பாக செய்திருக்கிறார்.

காடு, மலை, அருவி என இயற்கையின் அழகை அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.பிஜு விஸ்வநாத். ராஜேஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இயக்குநர் மகேஷ் பத்மநாபன் காதல் கதையோடு காதலர்களுக்கு நல்ல கருத்தை சொல்லி, திரைக்கதையை நகர்த்தி செல்வது சிறப்பு

நடிகர்கள் : ருத்ரா, சுபிக்ஷா, சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி

இசை ராஜேஷ்

இயக்குனர் : மகேஷ் பத்மநாபன்

மக்கள் தொடர்பு : மணவை புவன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *