ஓணான் – பட விமர்சனம்
நாயகன் திருமுருகன் பாபநாசத்துக்கு அருகில் இருக்கும் கிராமத்திறகு விலாசம் ஒன்றை தேடி வருகிறார் வந்த இடத்தில் பூ ராமுவை ஒரு ஆபத்திலிருந்து இருந்து காப்பாற்றுகிறார். ஆதரவில்லாத திருமுருகனை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் பூ ராமு.
பூ ராமு தம்பதியுடன் அவரது மகன் காளி வெங்கட் மனைவி குழந்தைகளுடனும், திருமணமாகாத மகள் நாயகி ஷில்பா மஞ்சுநாத்தும் இருக்கிறார்கள். அந்த வீட்டின் சிறிய வேலைகளைச் செய்து வரும் திருமுருகன் மீது ஷில்பா காதல் கொள்ள, அவருக்கே ஷில்பாவைத் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அவர்களின் முதலிரவில் தன் குடும்பத்தையே கொலை செய்த மனநோயாளிதான் திருமுருகன் என்ற உண்மை காளி வெங்கட்டுக்குத் தெரிய வருகிறது. அவனிடமிருந்து தனது தங்கையையம் , குடும்பத்தினரையம் காப்பாற்றினாரா ? இல்லையா? என்பதே “ஓணான் ” படத்தின் மீதிக்கதை.
களவாணி‘ படத்தில் கதாநாயகிக்கு அண்ணனாக வந்த திருமுருகன் சதாசிவம் காணாமல் போய் இப்போது இந்தப் படத்தின் மூலம் நாயகனாகத் திரும்பி வந்திருக்கிறார். மலைக்க வைக்கும் மல்யுத்தவீரன் போல் உருமாறியிருக்கிற திருமுருகன் தந்திருக்கிற நடிப்பு அருமை
கிராமத்து இளமை அழகில் ஜொலிக்கிறார் ஷில்பா அவரது விழிகள் காதல் மொழி பேசுவது அழகு காமெடியனாக பார்த்துப் பழகிய காளி வெங்கட்டை இப்படி ஒரு கொடூர முகம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. வேறொரு பரிமாணத்திலும் பார்ப்பது வித்தியாசமான அனுபவம். பாசக்கார தந்தை கேரக்டரில் வருகிற ‘பூ’ ராமு காமெடிக்கு சிங்கம்புலியை இதில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ரஜீஷ் ராமனின் ஒளிப்பதிவும், ஆன்டனி ஆப்ரகாம் இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. நம் எதிர்பார்ப்பை எல்லாம் உடைத்து எதிர்பாராத கதை ஒன்றைச் சொல்கிறார் இயக்குனர் சென்னன். கடைசிவரை சஸ்பென்ஸாக திரைக்கதையை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது