BREAKING NEWS
Search

ஜோதிகா சூர்யா ஒரு கோடி ரூபாய் நன்கொடை பழங்குடி இருளர்

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக ஜோதிகா சூர்யா ஒரு கோடி ரூபாய் நன்கொடை

பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜெய் பீம்’. தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் தயாராகியிருக்கிறது. இதனை ஊடகவியலாளரும் திரைப்பட இயக்குநருமான த.செ. ஞானவேல் இயக்கியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் நவம்பர் இரண்டாம் தேதி அமேசான் பிரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இந்தத் திரைப்படத்தில் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினரான இருளர்களின் வாழ்வியலும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளும் அழுத்தமாக பேசப்பட்டிருக்கிறது. இதில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார்.

திரைப்படம் என்பது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்த ஊடகம் என்பது ‘ஜெய் பீம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் சூர்யா மற்றும் அவரது படக்குழுவினர் உறுதி படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் தமிழ் சமூகத்தில் இருளர் பழங்குடி இன மக்களும், அவ்வின மாணவர்களும் எதிர்கொள்ளும் சமூகவியல் பிரச்சினைகளை பேசி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர்களின் கல்வி நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவியை, தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக சூர்யா வழங்கினார். இதன் போது நடிகர் சூர்யா, ஜோதிகா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், நீதியரசர் சந்துரு, இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *