இன்ஷா அல்லாஹ் – விமர்சனம்
நேசம் எண்டர்டடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் சாகுல் ஹமீது தயாரிப்பில் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கத்தில் மோகன், மேனகா, நம்பிராஜன், திருமதி பகவதி அம்மாள், அப்துல் சலாம், நரேன் பாலாஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இன்ஷா அல்லாஹ்
இஸ்லாம் மார்க்க நெறிமுறைகளாக ஹ்ஜ்யணம் உள்ளிட்ட ஐந்து கடமைகள் வலியுறுத்தப்படுகின்றன. ஒவ்வொரு இள்லாமியரும் இந்த 5 கடமைகளை தன் வாழ்நாள் முழுக்க கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கும் இஸ்லாமியர் இறப்பிற்கு பிறகு சொர்க்கத்துக்கு செல்வர். ஐந்து கடமைகளை நிறைவேற்றாதவர்கள் நரகத்துக்கு செல்வார்கள் என்ற இஸ்லாம் மார்க்க நெறியை இப்படம் விளக்குகிற்து.
கோயம்புத்தூரை கதை களமாக கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் ஆதரவற்று பிச்சை எடுத்து திரியும் முதிய தம்பதி, இந்து மதத்தை சேர்ந்த பணக்கார பெண்ணை காதலித்து மணந்த இஸ்லாம் வாலிபன் என்று கிளைக்கதை தொடர்கிறது. காட்சிகள் எதுவும் நேரடி வசனங்களால் சொல்லப்படாமல் புரிதில் மூலமாக உணரும் வ்கையில் சீன்களை அமைத்திருக்கிறார்கள்.
இந்து பெண் ஒருவரை இஸ்லாம் வாலிபன் மணந்துகொண்டு சந்தோஷமாக வாழும் கிளைக்கதையொன்றும் படத்தில் தொடக்கம்முதல் இறுதிவரை தொடர்கிறது. அந்த வேடத்தில் மோகன், மேனகா, நடித்திருக்கின்றனர்.
விதவை பெண்களுக்கும். கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் புதிய சமுதாய அறக்கட்டளை வீடுகள் கட்டி தருவது, ஜீவ சாந்தி அமைப்பு ஆதரவற்ற பிணங்களை வேனில் சுமந்து சென்று அடக்கம் செய்வது அந்த பணி இந்து மதத்தினருக்கும் செய்வதை காட்சிகள் விளக்குகின்றன.இந்த சமூக பணிகளை சமுதாயத்துக்கு வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்.
சர்வதேச அளவில் 32 விருதுகளையும் இப்படம் பெற்றிருக்கிறது.
நடிப்பு: மோகன், மேனகா, நம்பிராஜன், திருமதி பகவதி அம்மாள், அப்துல்சலாம், நரேன் பாலாஜி
தயாரிப்பு: சாகுல் ஹமீது (நேசம் எண்டர்டடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்)
இணை தயாரிப்பு: கோவை இப்ராஹிம்
இசை: செந்தில் குமரன் சண்முகம் (படப்பிடிப்பு நடந்த இடத்தில் நேரடி ஒலிப்பதிவு)
ஒளிப்பதிவு: டி.எஸ்.பிரசன்னா
இயக்கம்: சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்
பி ஆர் ஓ : சதீஷ் (AIM)