அனபெல் சேதுபதி – விமர்சனம்
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திரபிரசாத் ஆகியோர் நடிப்பில் கிருஷ்ண கிஷோர் இசையில் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அனபெல் சேதுபதி’ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அனபெல் சேதுபதி: திரைப்பட விமர்சனம்
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திரபிரசாத் ஆகியோர் நடிப்பில் கிருஷ்ண கிஷோர் இசையில் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அனபெல் சேதுபதி’ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ராஜாவாக இருக்கும் விஜய் சேதுபதி , லண்டனில் இருந்து வரும் வெள்ளைக்காரப் பெண் டாப்ஸியை பார்த்ததும் காதல் கொள்கிறார். விஜய்சேதுபதி தனது காதலிக்காக பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றை காட்டுகிறார். விஜய்சேதுபதி – டாப்ஸி இருவரும் திருமணத்திற்கு பிறகு அந்த அரண்மனையில் குடியேறுகிறார்கள் அந்த மாளிகையை பார்த்து பொறாமைப்படும் ஜமீன்தார் ஜெகபதிபாபு மாளிகையை அடைய நினைக்கிறார் மாளிகையை விஜய்சேதுபதியிடம் கேட்டும் தரமறுக்கிறார் . இந்நிலையில் கர்பமடைகிறார் டாப்ஸி கணவன் – மனைவி இருவருக்கும் விஷம் வைத்து கொன்று மாளிகையை அடைகிறார் ஜெகபதிபாபு விஜய்சேதுபதியின் உதவியாளராக இருக்கும் யோகிபாபு தனது ராஜாவை கொன்ற ஜெகபதிபாபு குடும்பத்தை விஷம் வைத்து கொள்கிறார்.
அந்த அரண்மனைக்குள் புதிதாக வருபவர் சமைத்து சாப்பிட்டு உயிரோடு இருக்க வேண்டும் என்ற சாபம் உள்ளது. அதனால் தங்களை விடுவிக்க யாராவது வர மாட்டார்களா என்று அந்த அரண்மனையில் உள்ள பேய்கள் காத்திருக்கின்றன..திருடுவதே தொழிலாக கொண்டிருக்கும் ராஜேந்திர பிரசாத் , ராதிகா , இவர்களுடைய மகள் டாப்ஸி ஆகியோர் அந்த அரண்மயில் வந்து தங்குகிறார்கள் . அவர் வந்த பிறகு அந்த பேய்களுக்கு விடுதலை கிடைத்ததா? டாப்சி கொள்ளையடித்தாரா? விஜய் சேதுபதிக்கும் டாப்சிக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய்சேதுபதி படம் தொடங்கி ஒரு மணி நேரம் கழித்தும், அதன் பின்னர் கிளைமாக்ஸில் ஐந்து நிமிடங்களும் வருகிறார். அதனால் இந்த படம் விஜய்சேதுபதி படம் என நினைத்து யாரும் ஏமாற வேண்டாம். படத்தை முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பது டாப்சி தான் அவருடைய கேரக்டரை சுற்றியே கதை நகர்கிறது.
கௌதம் ஜார்ஜின் ஒளிப்பதிவு அருமை. அழகிய அரண்மனையை வளைத்து வளைத்து தனது கேமராவில் படம் பிடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள். கிருஷ்ணா கிஷோரின் இசை கொஞ்சம் கேட்கும் ரகம். தீபக்
மொத்தத்தில் ‘அனபெல் சேதுபதி’ பேய் காமெடி